சிவகார்த்திகேயன் மகன் குகன் தாஸுக்கு இப்படி ஒரு வினோத பழக்கமா? எஸ்.கே சொன்ன சீக்ரெட்

Published : Nov 19, 2024, 12:40 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் மகன் குகன் தாஸுக்கு உள்ள வினோதமான பழக்கம் ஒன்றை பற்றி பேசி இருக்கிறார்.

PREV
15
சிவகார்த்திகேயன் மகன் குகன் தாஸுக்கு இப்படி ஒரு வினோத பழக்கமா? எஸ்.கே சொன்ன சீக்ரெட்
Sivakarthikeyan son Gugan

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து அடுத்த சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்படுபவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியகாவும் திகழ்ந்து வருகிறார் எஸ்.கே. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆன அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்துள்ளது.

25
aarthi sivakarthikeyan

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. அவர் நடிப்பில் தற்போது எஸ்.கே.23 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இதுதவிர சிபி சக்கரவர்த்தி உடன் ஒரு படம், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், குட் நைட் பட இயக்குனருடன் ஒரு படம், வெங்கட் பிரபு உடன் ஒரு படம் என சிவகார்த்திகேயனின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோ; ஏன் அமரனில் காமெடி சீன் வைக்கல? இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

35
Sivakarthikeyan Daughter

சினிமாவில் பிசியாக இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை அதிகம் விரும்புபவர் சிவகார்த்திகேயன். இவருக்கு ஆர்த்தி என்கிற மனைவியும், ஆராதனா, குகன் தாஸ், பவன் என மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இதில் கடந்த ஜூன் மாதம் தான் சிவகார்த்திகேயனுக்கு பவன் தாஸ் என்கிற மகன் பிறந்தார். குழந்தைகள் மீது அதீத அன்பு வைத்திருக்கும் சிவகார்த்திகேயன், அவர்களைப்பற்றி பல்வேறு பேட்டிகளில் ஓப்பனாக பேசி இருக்கிறார்.

45
Sivakarthikeyan Family

இதில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா சினிமாவில் பாடல்கள் பாடி இருப்பதால் அவரைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனின் மகன் குகன் தாஸ் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு உள்ள ஒரு வினோத பழக்கம் பற்றி சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதன்படி குகன் தாஸுக்கு இனிப்பு என்றாலே சுத்தமாக பிடிக்காதாம்.

55
Gugan Doss

ஒரு முறை அவருக்கு ஐஸ்கிரீம் ஊட்டிவிட்டதாகவும், அப்போது அது பிடிக்காமல் குகன் கண்ணீர் விட்டு அழுதுவிட்டதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். அதேபோல் கேக் உள்பட எந்தவித இனிப்பும் அவருக்கு பிடிக்காதாம். அதற்கு மாறாக காரமான பண்டங்களை விரும்பி சாப்பிடுவான் என்று சிவகார்த்திகேயன் கூறியதை பார்த்த ரசிகர்கள், இந்த காலத்தில் இப்படி ஒரு குழந்தையா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அமரன் படத்திற்கு எதிர்ப்பா? திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories