
Kasthuri Shankar Husband, Son and Daughter: சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்ற நடிகை கஸ்தூரி முதல் முறையாக ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறப்பிலேயே வசதியான குடும்பத்தில் பிறந்த நடிகை கஸ்தூரியின் அம்மா சுமதி வழக்கறிஞர். அப்பா ஷங்கர் இன்ஜினியர்.
பட்ட படிப்பை முடித்த கஸ்தூரி சினிமாவில் எண்ட்ரியாவதற்கு முன்னரே 1992ல் மிஸ் சென்னை அழகி போட்டியில் டைட்டில் வென்றுள்ளார். அதே வருடத்தில் ஃபெமினா மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியிலும் வென்றார். படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் பிறகு தான் அவர் சினிமாவிற்குள் காலடி எடுத்து வந்தார்.
கஸ்தூரி சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா. அவர் தான் கஸ்தூரியை ஆத்தா என் கோயிலிலே படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்தப் படத்தில் கஸ்தூரி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தவே ராசாத்தி வரும் நாள், கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை, செந்தமிழ் பாட்டு, அபிராமி, ராக்காயில் கோயில், புதிய முகம், ஆத்மா, உடன் பிறப்பு, அமைதிப் படை, தென்றல் வரும் தெரு, இந்தியன், காதல் கவிதை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே மருத்துவரான ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண தேதி மற்றும் புகைப்படங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
எனினும், கஸ்தூரிக்கு சங்கல்ப் என்ற மகனும், ஷோபினி என்ற மகளும் இருக்கின்றனர். ஆனால், மகள் ஷோபினி லுகேமியால் பாதிக்கப்பட்டுள்ளார். இது ஒரு வகையான ரத்த புற்றுநோய் ஆகும். கடந்த 2010 ஆம் ஆண்டு கஸ்தூரி புதுயுகம் டிவியில் வினா விடை வேட்டை என்ற க்யூஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது சமூக ஆர்வலராக வலம் வரும் கஸ்தூரி சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கருத்து சொல்கிறேன் என்று பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். அப்படி ஒரு சம்பவத்தை பற்றி பேசி இப்போ சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி தவறாக பேசிய நிலையில் இப்போது புழல் சிறையில் இருக்கிறார். அங்கும் அவர் சிறை உணவு சாப்பிடுவதை தவிர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. கஸ்தூரில் தனது சமூகத்தின் மீதான ஆர்வம் காரணமாக குடும்பத்தை விட்டு விட்டு தனியாக வசித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.