உப்பு உணவின் சுவையை மேம்படுத்தினாலும், அதிக உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
உப்பு என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். உணவின் சுவையை மேம்படுத்த உப்பு உதவுகிறது. ஆனால் உப்பு அதிகமானால் அது உடல் ஆரோக்கியத்திற்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக உப்பு, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும், புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது. இந்த நிலையில் அதிக உப்பு உட்கொள்வதால் வயிற்று புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது..
இரைப்பை புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, உப்பின் தீங்கு விளைவிக்கும் விளைவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது இரத்த அழுத்தத்தை தூண்டுவதுடன், புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது, உடல் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
undefined
இரைப்பை புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, உப்பின் தீங்கு விளைவிக்கும் விளைவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வெறும் வெந்நீர்தானேனு நினைக்காதீங்க; 5 நோய்களை நீக்கும் அருமருந்தாம் அது!
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்த ஆய்வு 471,144 யுனைடெட் கிங்டம் பயோபேங்க் நபர்களை ஆய்வு செய்தது மற்றும் உணவுகளில் உப்பு சேர்க்கும் அதிர்வெண் மற்றும் வயிற்று புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்தது. அதில் உப்பு உட்கொள்ளல் இரைப்பை புற்றுநோய் அபாயத்துடன் தொடர்பு இருப்பதாக உறுதி செய்துள்ளது.
10.9 ஆண்டுகள் நடந்த இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 640 இரைப்பை புற்றுநோய் பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. வயிற்றில் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் பல ஆபத்து காரணிகளில், ஒரு காரணி உப்பு-பாதுகாக்கப்பட்ட உணவுகளின் நுகர்வு என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இரவில் '1' கிளாஸ் பால், ஒரு வாழைப்பழம்.. ஏன் கண்டிப்பாக ஆண்கள் சாப்பிடனும்?
உணவில் அதிகளவு உப்பை சேர்ப்பதால் அது உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இது இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பேக்கேஜ்டு உணவு மற்றும் பதப்பட்டுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு உப்பு இருப்பதால், நமக்கு தெரியாமலே அது தினசரி உப்பு நுகர்வை அதிகரிக்கிறது. எனவே உப்பின் அளவை படிப்படியாக குறைப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.