தீபாவளி லேகியம் பத்தி தெரியுமா? என்ன சாப்பிட்டாலும்  செரிக்க வைக்கும்!! எப்படி செய்வது?

By Kalai SelviFirst Published Oct 30, 2024, 11:26 AM IST
Highlights

Diwali 2024 : தீபாவளி பண்டிகை நாளில் பண்டம் பலகாரங்கள் அதிகம் சாப்பிடாலும் அவற்றை ஜீரணிக்க தீபாவளி லேகியம் உதவும். அதை தயாரிக்கும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகையானது நாளை வருகிறது. தீபாவளி நாளில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள். இது ஒரு புறம் இருக்க தீபாவளி பண்டிகை நாளில் வீட்டில் பலவிதமான உணவுகள் மற்றும் பண்டம் பலகாரங்கள் செய்திருப்பார்கள். காரம் இனிப்பு என்று பார்க்காமல் அவை அனைத்தையும் அதிகமாக எடுத்துக் கொள்வது வழக்கம். இதனால் வாயு, ஜீரணப் பிரச்சனை போன்றவை ஏற்படும்.

பொதுவாகவே, பிற நாட்களில் நாம் சாப்பிடும் இனிப்பும், காரமும் சீக்கிரமே ஜீரணத்து விடும். ஆனால் தீபாவளி நாளில் நாம் சாப்பிடும் பண்டம் பலகாரங்கள் ஜீரணிப்பது கடினமாக இருக்கும். எனவே இதற்கு தீபாவளி லேகியம் கட்டாயம் உதவும். இந்த தீபாவளி லேகியத்தை நீங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அது எப்படி செய்வது என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Videos

இதையும் படிங்க: தீபாவளி பலகாரம் எவ்ளோ சாப்பிட்டாலும்...  அஜீரணமாகாமல் தடுக்கும் 'மந்திர பானம்' செய்வது எப்படி?

தீபாவளி லேகியம் செய்ய தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி விதை - 50 கிராம்
ஓமம் - 25 கிராம்
மிளகு - 25 கிராம்
சீரகம் - 25 கிராம்
சுக்கு - 1 துண்டு
வெல்லம் - 500 கிராம்
அதிமதுரம் - 1 துண்டு
சித்தரத்தை - 1 துண்டு
கண்டந்திப்பிலி - 1 ஸ்பூன்
அரிசித்திப்பிலி - 1 ஸ்பூன்
நெய் - 50 கிராம்
தேன் - 2 ஸ்பூன்
விரலி மஞ்சள் - 1 துண்டு
நல்லெண்ணெய் - 25 கிராம்

இதையும் படிங்க: ரூ.1 கூட செலவில்லாமல் முகம் பளபளவென ஜொலிக்கும்.. தீபாவளிக்கு இந்த மாதிரி பண்ணுங்க!!

தீபாவளி லேகியம் தயாரிக்கும் முறை:

இதற்கு முதலில், விரலி மஞ்சள், அரிசித்திப்பிலி, கண்டந்திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சுக்கு, ஓமம், சீரகம், மிளகு, மல்லி விதை ஆகியவற்றை வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். அடுத்ததாக அதிமதுரம், சுக்கு, மஞ்சள், சித்தரத்தை, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி ஆகியவற்றை இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மல்லி, மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இவற்றை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அழைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரைந்ததும், 
அதை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகாகும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். அதனுடன் தயாரித்து வைத்த பொடியையும் தூவி விடுங்கள். இதனிடையே நீ விட்டுக் கிளறி விடுங்கள். அடுப்பு சிம்மில் வைக்க வேண்டும். கைகளால் உருட்டும் பதத்திற்கு வந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கி அதில் தேன் சேர்க்க வேண்டும். பிறகு ஒரு முறை நன்றாக கிளறி விடுங்கள். அவ்வளவுதான் தீபாவளி லேகியம் தயார்.

click me!