தீபாவளி பலகாரம் எவ்ளோ சாப்பிட்டாலும்...  அஜீரணமாகாமல் தடுக்கும் 'மந்திர பானம்' செய்வது எப்படி?

Diwali 2024 : தீபாவளி பலகாரங்களால் வயிற்று உப்புசணம், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட்டால் அவற்றை தடுக்கும் சூப்பரான மந்திர பானம். அதை செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

how to get rid of indigestion after diwali with kashayam in tamil mks

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் வருகிறது. பொதுவாக தீபாவளி என்றாலே ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு பண்டிகை இதுவாகும். தீபாவளி நாளில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மிகவும் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

தீபாவளிக்கு முன்னதாக பலரது வீடுகளில் பண்டம் பலகாரங்கள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இன்னும் சிலரோ பல வகையான பலகாரங்களை கடைகளில் வாங்குவார்கள். இப்படி வீட்டில் செய்த மற்றும் கடைகளில் வாங்கிய பலகாரங்களை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு மகிழ்வோம். இது தவிர அன்றைய தினம் வீட்டில் ஸ்பெஷலாக செய்யும் உணவையும் வயிறுமுட்ட சாப்பிட்டுவோம். 

ஆனால் இதன் விளைவு மறுநாள் தான் தெரியும். ஆம் இப்படி வயிறுமுட்ட சாப்பிடுவதால் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோம். இத்தகைய சூழ்நிலையில் இந்தப் பிரச்சனையில் இருந்து உடனே நிவாரணம் பெற ஒரு சூப்பரான கசாயம் உள்ளது. அதுவும் இந்த கசாயத்தை நீங்கள் உங்களது வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து தயாரிக்கலாம். சரி வாங்க இப்போது அந்த கசாயம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: ரூ.1 கூட செலவில்லாமல் முகம் பளபளவென ஜொலிக்கும்.. தீபாவளிக்கு இந்த மாதிரி பண்ணுங்க!! 

தேவையான பொருட்கள்:

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சுக்கு பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
அதிமதுரம் - 1/2 ஸ்பூன்
ஓமம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1/2 ஸ்பூன்
வெல்லம் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 250 மி.லி

இதையும் படிங்க: தீபாவளிக்கு முன் இந்த '1' பொருளை வாங்கிடுங்க...  கோடீஸ்வரங்க வீட்டில் செல்வம் குவிய அதுதான் காரணம்!! 

செய்முறை:

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்து தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பிறகு அதில் மிளகு தூள், சுக்கு பொடி, மஞ்சள் தூள், அதிமதுரம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இதனை அடுத்து அதில் சீரகம், பெருஞ்சீரகம் கொத்தமல்லி விதை ஆகியவற்றை கையால் நன்றாக நசுக்கி அதில் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து இதில் வெல்லம் சேர்க்கவும். தண்ணீர் பாதி அளவு குறைந்தவுடன் அதை வடிகட்டவும். அவ்வளவுதான் தீபாவளி மந்திர பானம் தயார்.

நினைவில் கொள் :

  • மேலே சொன்ன பொருட்கள் ஆனது ஒரு நபருக்கானது. வேண்டுமானால் நீங்கள் நபர்களுக்கு ஏற்றவாறு பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அதுபோல கசாயத்தை ஒருபோதும் சூடாக குடிக்க வேண்டாம். மீறி குடித்தால் விக்கல் ஏற்படும்.
  • நீங்கள் கஷாயம் குடித்த பிறகு சுமர் அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios