ரூ.1 கூட செலவில்லாமல் முகம் பளபளவென ஜொலிக்கும்.. தீபாவளிக்கு இந்த மாதிரி பண்ணுங்க!!
Diwali 2024 Skin Care : எந்த விலையுர்ந்த பொருள்களும் பயன்படுத்தாமல் தீபாவளி அன்று முகம் பளபளப்பாக மாற செய்ய வேண்டிய எளிய சரும பாராமரிப்பு முறையை இங்கு காணலாம்.
Diwali 2024 Skin Care Tips In Tamil
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் எல்லோருக்கும் புத்தாடைகள் அணிவது மகிழ்ச்சியை தரும். புத்தாடை அணியும்போது கூடுதலாக அழகாக தெரிய பல பெண்கள் மேக்கப் போட்டு கொள்வார்கள். சில இயற்கையில் தங்களுக்கு இருக்கும் அழகோடு பண்டிகையை கொண்டாடுவார்கள்.ஆனால் இதில் எந்த வகை பெண்ணாக இருந்தாலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கூடுதல் பளபளக்கும் சருமம் கிடைக்கும்.
Diwali 2024 Skin Care Tips In Tamil
பிரகாசமான ஆரோக்கியமான சருமம் தான் உங்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். நீங்கள் பண்டிகையை உற்சாகமாக மகிழ்ச்சியாக கொண்டாட முடியும். இந்த தீபாவளி அன்று சிறப்பான சருமம் கிடைக்க பயனுள்ள சரும பராமரிப்பு குறிப்புகள் இங்கே காணலாம்.
Diwali 2024 Skin Care Tips In Tamil
உளுந்து பேஸ் பேக்:
உளுந்து உங்களுடைய சரும பராமரிப்புக்கு உதவுகிறது. உளுந்தை பாலில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதை அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது. இந்த கலவைதை முகம் மற்றும் கழுத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பின் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
Diwali 2024 Skin Care Tips In Tamil
ஈரப்பதம்:
சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். பண்டிகைக் காலங்களில் வானிலை மாற்றங்கள், வெப்பம் போன்றவை உடலில் வெப்பசமநிலையை குலைக்கும். அதனால் சருமம் வறண்டுவிடும். இதை தவிர்க்க நிறைய தண்ணீர் குடியுங்கள். இரவில் படுக்கைக்கு செல்லும் முன் முகத்தை நன்கு கழுவி விட்டு மாய்ஸ்சரைசர் போட்டு படுக்கவும்.
தற்போது ஸ்நையில் மியூசின்(Snail Mucin) பலர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பொதுவாக ஹைலூரோனிக் அமிலம் அல்லது கிளிசரின் இருக்கும் தயாரிப்புகளை வாங்குவது நல்லது. இந்த பொருள்கள் உள்ள மாய்ஸ்சரைசர் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
Diwali 2024 Skin Care Tips In Tamil
பேஸ் பேக்:
தீபாவளிக்கு முந்தைய நாள்களில் சருமத்தை ஈரப்பதமாக்கும் பேக் பேக் பயன்படுத்துங்கள். வைட்டமின் சி, கற்றாழை அல்லது தேன் ஆகிய பொருட்கள் கலந்த பேஸ் பேக் உடனடி பளபளப்பை வழங்கும். சருமத்தை புத்துணர்ச்சியோடு வைக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது பேஸ் பேக் போட வேண்டும்.
இதையும் படிங்க: தீபாவளி நாளில் தீக்காயம் ஏற்பட்டுருச்சா? உடனே 1 ஸ்பூன் நெய் இப்படி யூஸ் பண்ணுங்க; புண் வராது!
Diwali 2024 Skin Care Tips In Tamil
சீரம்:
தோல் பராமரிப்புக்கு சீரம் நல்ல பலனளிக்கும். தோல் பிரச்சனைகளை திறம்பட கையாள சீரம் நல்ல தேர்வு. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், மந்தமான தன்மை அல்லது பள்ளங்கள் மாதிரியான சீரற்ற அமைப்பு சீரம் பயன்படுத்துங்கள். இதில் வைட்டமின் சி அல்லது நியாசினமைடு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்க வேண்டும். இந்த சீரம் முகத்தை பிரகாசமாக்கும்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு முன் இந்த '1' பொருளை வாங்கிடுங்க... கோடீஸ்வரங்க வீட்டில் செல்வம் குவிய அதுதான் காரணம்!!
Diwali 2024 Skin Care Tips In Tamil
சன் ஸ்கீரின்:
பண்டிகை காலமாக இருந்தாலும் கூட, சன் ஸ்கிரீனை தவிர்க்கக் கூடாது. சருமத்தை பாதிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து தப்பிக்க, SPF 50க்கு மேல் உள்ள சன் ஸ்கிரீன் தினமும் பயன்படுத்துவது அவசியம். நீங்கள் வீட்டுக்குள்ளே இருந்தாலும் இந்த சன் ஸ்கிரீன் முக்கியமானது. உங்கள் தோல் வகைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுங்கள்.