தீபாவளி நாளில் தீக்காயம் ஏற்பட்டுருச்சா? உடனே 1 ஸ்பூன் நெய் இப்படி யூஸ் பண்ணுங்க; புண் வராது!
Diwali 2024 : தீபாவளி அன்று சில சமயங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு விடும். இதனால் தீக்காயம் பட்ட இடத்தில் கொப்பளங்கள் வந்துவிடும். எனவே இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை செய்தால் போதும்.
Home Remedies For Diwali Crackers Fire Skin Burn In Tamil
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது சில சமயங்களில் கவனக்குறைவால் கை கால்களில் தீக்காயம் ஏற்பட்டு விடும். இதனால் சிலர் உடனே ஐஸ்கட்டி வைத்து முதலுதவி எடுத்துக் கொள்ளுவார்கள். ஆனால் இப்படி செய்வது தவறு. மேலும் வலி மற்றும் எரிச்சலை குறைக்க பலர் பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். இதனால் சில சமயங்களில் கொப்புளங்கள், புண், வடு வந்துவிடும். இப்படி தீ பிடிக்கும்போது முதலில் என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை.
Home Remedies For Diwali Crackers Fire Skin Burn In Tamil
எனவே தீபாவளி அன்று எதிர்பாராத விதமாக தீக்காயம் ஏற்பட்டால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கவும், தீக்காயங்கள் உடனே சரியாக சில வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: வெடி புகை பாதிக்காமல் 'ஆஸ்துமா' நோயாளிகள் எப்படி 'தீபாவளி' கொண்டாடனும் தெரியுமா?
Home Remedies For Diwali Crackers Fire Skin Burn In Tamil
தீபாவளி அன்று தீக்காயம் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் :
தண்ணீர்
தீபாவளி அன்று கையில் தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலில், குழாய் நீரில் அந்தப் பகுதியை வைக்க வேண்டும். சுமார் 20 நிமிடம் அப்படியே வைக்கவும். ஒருவேளை நீங்கள் ஐஸ் கட்டி அல்லது ஐஸ் வாட்டர் அங்கு பயன்படுத்தினால் அந்தத் தோல் திசுவானது சேதம் அடைய வாய்ப்பு அதிகம் உள்ளது.
தேன் & தேங்காய் எண்ணெய்
தீக்காயம் பட்டு கையெறிந்தால் உடனே சரியாக, அதில் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலக்கி அதை பாதிக்கப்பட்ட இடத்தில் உடனே தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால் எரியும் உணர்வு குறையும் மற்றும் கொப்புளங்கள் வராது.
Home Remedies For Diwali Crackers Fire Skin Burn In Tamil
கற்றாழை
தீபாவளி அன்று கை கால்களில் ஏதேனும் தீக்காயம் ஏற்பட்டால் உடனே அந்த இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் சருமத்தில் எரிச்சல் ஏற்படாது மற்றும் புண் ஏற்படாது. வேகமாகவும் குணமாகும்.
நெய்
தீபாவளி சமயத்தில் கையில் தீக்காயம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் எரிச்சலை குறைக்க அந்த இடத்தில் நெய் தடவ வேண்டும். இப்படி செய்தால் அந்த பகுதியில் குளிர்ச்சியாக இருக்கும்.
Home Remedies For Diwali Crackers Fire Skin Burn In Tamil
அத்தியாவசிய எண்ணெய்
சருமத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டால் அத்தியாவசிய எண்ணெய்கள் ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தீக்காயம் பட்ட சருமத்திற்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது மற்றும் வலியையும் குறைக்க பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: வெடி போடுற குழந்தைகளை தடுக்காதீங்க... 'இப்படி' பண்ணா பாதுகாப்பா இருப்பாங்க!!