சிலரை தொடும்போது மட்டும் நமக்கு மின்சாரம் தாக்குவது மாதிரியான உணர்வு வரும். அது எப்படி நடக்கிறது என்பதை இங்கு காணலாம். 

யாரையாவது திடீரென்று தொடும்போது உடம்பெல்லாம் கூசி மெய் சிலிர்ப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? மனிதர்கள் மட்டுமின்றி, வீட்டில் இருக்கும் சில பொருளை தொட்டாலும் சட்டென ஒரு மாதிரி இருக்கும். அதாவது உடலில் ஒரு அதிர்வு வரும். அதை ஏன் என எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா? அது நிலையான மின்னோட்டத்தால் நிகழ்கிறது. ஆனால் இது ஏன் எப்போதாவது மட்டும் நடக்கிறது என யோசித்திருக்கிறீர்களா? இது நம்மை சுற்றியுள்ள அணுக்களால் நிகழ்கிறது. 

அறிவியல் காரணம் 

நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் அணுக்களால் ஆனது. மனித உடலும் இதில் அடங்கும். இந்த அணுக்கள் புரோட்டான்கள், எலக்ட்ரான்கள், நியூட்ரான் ஆகிய 3 வகையான துகள்களால் ஆனது. இந்த மூன்றுக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு. எலக்ட்ரான் (-) எதிர்மறை, புரோட்டான் (+) நேர்மறை, நியூட்ரான் நடுநிலை ஆற்றலுடன் இயங்கிவருகிறது. எலக்ட்ரான்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் தன்மை கொண்டது. இதனால் துணிகள், மற்ற பொருள்கள் மீது விசையை ஏற்படுத்த முடியும். 

எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்களுக்கு இடையில் சமநிலையின்மை... வேறுவிதமாக சொல்ல வேண்டுமெனில் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றலின் ஏற்றத்தாழ்வு இருக்கும் போது தான் எலக்ட்ரான் நகர்கிறது. அது நிலையான மின்சாரம் என்று அழைக்கப்படுகிறது. 

இதற்கு வானிலை காரணமா? 

ஆம், வாய்ப்புள்ளது. குளிர்காலத்திலும், நம்மைச் சுற்றியுள்ள வறட்சி காலநிலையிலும் இது நடக்கிறது. நம்மை சுற்றியுள்ள காற்று வறண்டு இருக்கும்போது நமது தோலின் மேற்பரப்பில் எலக்ட்ரான்கள் எளிதில் உருவாகின்றன. அப்போது ஒருவரை தொடும்போது அந்த உணர்வு ஏற்படுகிறது. ஆனால் கோடையில் இந்த மாதிரி நடப்பதில்லை. 

இதையும் படிங்க: இரண்டு மாசமானாலும் கேஸ் சிலிண்டர் தீராமல் சமைக்க.. இந்த மாதிரி டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள்..!

நம் உடலில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால், நேர்மறை ஆற்றல் உள்ள பொருளுடன் தொடர்பு கொண்டவுடன், எலக்ட்ரான்கள் நம்மிடம் இருந்து அங்கு செல்ல துடிக்கும். இந்த செயல்பாடு நடக்கும்போது நாம் ஒரு அங்குல தூரத்தில் இருந்தால் அப்போது காற்று துகள்களை உடைத்து, திடீரென்று நாம் அதிர்ச்சியடையும் அளவுக்கு ஒரு எனர்ஜி வரும். 

எச்சரிக்கை...! 

ஆனால் இந்த உடல் சிலிர்ப்பு உங்களுக்கு அடிக்கடி வந்தால், உங்கள் உடலில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என பொருள். இதை தவிர்க்க நினைத்தால் பின்வரும் விஷயங்களை செய்யுங்கள். 

  • ரப்பர் செருப்பு போட்டு நடக்காதீர்கள். 
  • பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை அணியுங்கள். 
  • உங்கள் சருமத்தை, கைகளை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள்.

இதையும் படிங்க: கெட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் 5 சூப்பர் உணவுகள் என்னென்ன தெரிஞ்சுகோங்க..