எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு மூலம் ரூ.50 லட்சம் காப்பீடு பெறலாம்! எப்படி தெரியுமா?

First Published | Nov 19, 2024, 1:42 PM IST

எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது விபத்துக் காப்பீடு இலவசமாகக் கிடைக்கும். எரிவாயு கசிவு அல்லது வெடிப்பு போன்ற விபத்துகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய இந்தக் காப்பீடு உதவும்.

Lpg Insurance

நாட்டில் கோடிக்கணக்கான குடும்பங்களில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த காலம் மாறி எல்பிஜி கேஸ் சிலிண்டர் மூலம் சமைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. எல்பிஜி கேஸ் மூலம் எளிதாகவும் விரைவாகவும் சமைக்க முடியும் என்றாலும் அதில் சில தீமைகளும் உள்ளன. குறிப்பாக பாதுகாப்பாக கையாளவில்லை எனில் சிலிண்டர் வெடிக்கும் சில அதிர்ச்சி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

Lpg Insurance

ஒருவேளை வீட்டில் கேஸ் சிலிண்டரில் வெடிப்பு ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ, காப்பீடு பெறுவது மிகவும் முக்கியம். ஆனால் பெரும்பாலான மக்கள் இதைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது, ​​50 லட்சம் விபத்துக் காப்பீடு முற்றிலும் இலவசம் என்பது பலருக்கும் தெரியாது.

Latest Videos


Lpg Insurance

உண்மையில், எல்பிஜி சிலிண்டரில் நிரப்பப்பட்ட எரிவாயு மிகவும் எளிதில் தீப்பற்றக் கூடியது., எனவே நீங்கள் முன்னெச்சரிக்கைகள் எடுத்தாலும் விபத்து ஏற்படலாம்.  வீட்டில் நடக்கும் இதுபோன்ற விபத்துகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் உரிமை இருக்கிறது. ஆம்.. வாடிக்கையாளர் தனது குடும்பத்திற்காக சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ரூ.50 லட்சம் காப்பீட்டை கோர முடியும்.

Lpg Insurance

MyLPG.in (http://mylpg.in) என்ற அரசாங்க இணையதளத்தின்படி, எல்பிஜி இணைப்பு பெறும் வாடிக்கையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெட்ரோலிய நிறுவனங்களால் விபத்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எரிவாயு கசிவு அல்லது வெடிப்பு போன்ற விபத்துகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவியாக ரூ.50 லட்சம் இந்த காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக, பெட்ரோலியம் நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே ஒரு கூட்டாண்மை உள்ளது. காப்பீட்டு நிறுவனம் அதை க்ளைம் செய்யும் போது செலுத்தும்.

இந்த காப்பீட்டில் ஒரு உறுப்பினருக்கு ரூ.10 லட்சம்.

முழு குடும்பத்திற்கும் அதிகபட்ச தொகை 50 லட்சம்.

சொத்துக்கு சேதம் ஏற்பட்டால், நீங்கள் 2 லட்சம் ரூபாய் வரை கோரலாம்.

உயிரிழக்கும் பட்சத்தில், தனிநபர் விபத்து காப்பீடு தொகையாக, 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

சிகிச்சைக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது, ஒரு உறுப்பினருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

Lpg Insurance

எப்படி காப்பீட்டு தொகையை கோருவது?

விபத்துக்குப் பிறகு, அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் உங்கள் எல்பிஜி விநியோகஸ்தரிடம் தெரிவிக்கவும்.

விபத்து குறித்து சம்பந்தப்பட்ட பகுதியுடன் தொடர்புடைய காப்பீட்டு நிறுவன அலுவலகம் தரைவழி விசாரணை நடத்தும்.

சிலிண்டரால் விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், அது குறித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

விசாரணை அறிக்கைக்குப் பிறகு, உரிமைகோரல் தாக்கல் செய்யப்படும், அதற்காக வாடிக்கையாளர் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

உரிமைகோரலுக்கு, காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் நகல் (காப்பீட்டுப் பலன்), மருத்துவச் செலவுகள் மற்றும் பில்கள் மற்றும் இறப்பு ஏற்பட்டால், பிரேதப் பரிசோதனை அல்லது இறப்புச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் தேவை.

click me!