இந்த 4 பொருட்களை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்கலாம்.

First Published | Mar 7, 2023, 7:13 AM IST

தற்போது உள்ள இளம் முறையினர் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் டயபடிஸ் எனப்படும் சர்க்கரை நோய் உள்ளது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்
 


இன்றைய நவீன உலகத்தில் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று சாப்பிட்டு உடலில் பல்வேறு வியாதிகளை வெகு விரைவாகவும், இலவசமாகவும் பெற்றுக் கொள்கிறோம். அப்படிப்பட்ட பல்வேறு வியாதிகளில் சர்க்கரை வியாதியும் ஒன்று. தற்போது உள்ள இளம் முறையினர் பலருக்கும் டயபடிஸ் எனப்படும் சர்க்கரை நோய் உள்ளது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரை நோய்க்கு உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள் மூலம் அதன் அளவை வெகு சுலபமாக குறைக்க முடியும். உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதும் அதே நேரத்தில் உணவு பழக்கங்களில் சிறு மாற்றம் செய்தாலே போதும் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். உணவு பழக்கங்கள் என்று குறிப்பிடும் போது இந்த 5 உணவு பொருட்களை தவறாமல் தொடர்ந்து கடைபிடித்து வருவதன் மூலம் உடலில் இருக்கும் சர்க்கரை அளவு வெகுவாக குறைக்கலாம். அது என்னென்ன பொருட்கள் என்று தெரிய வேண்டுமாவாருங்கள்! பார்க்கலாம்.

தற்போது மார்க்கெட்களில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்ப்பதால் சர்க்கரை அளவை அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே சர்க்கரைக்கு மாற்றாக வேறு என்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவு கூறுகிறது.

சிக்கனை இப்படி செய்து தந்தா சும்மாவே சாப்பிடுவாங்க!

வெல்லம் :

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் அதிக அளவு சர்க்கரை உள்ளவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் 1 -2 ஸ்பூன் என்று அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெல்லத்தில் மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். சிலர் வெல்லத்தை தனியாக சாப்பிடுவார்கள் அப்படி சாப்பிடாமல் சிறிது இஞ்சி, ஏலக்காய் போன்றவை சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம்.

Latest Videos


பேரிச்சை:

பேரீட்சை பழம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றாலும்,இதனை வெள்ளை சீனிக்கு பதிலாக நாம் பயன்படுத்தலாம். இதில் அதிக கலோரிகள் உள்ளது என்றாலும் நார்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னிஷியம், பொட்டாஷியம், வைட்டமின் பி6 போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இதனை நாம் பேஸ்ட் போன்று செய்து பாலில் சேர்த்து பருகி வரலாம். மேலும் இதர பானங்களிலும் சேர்த்து சுவைக்கலாம். இதிலுள்ள இனிப்பு சுவை சர்க்கரை நோயாளிகளை பெரிய அளவில் பாதிக்காது. இதனை அளவோடு சாப்பிட்டு வர நிச்சயமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

ஸ்டிவியா:

ஸ்டிவியா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது இனிப்புத் துளசி ஆகும்.இந்த பயிரானாது மகராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற பானங்களில் சேர்த்து எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். மேலும் பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றிலும் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் இந்த செயற்கை இனிப்பூட்டி-க்கு பக்க விளைவுகள் இருப்பதாக தெரியவில்லை.

கருப்பட்டி :

கருப்பட்டியில் கால்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்து காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துணை புரிகிறது. மேலும் இதில் விட்டமின்-பி, அமினோ அமிலங்கள் போன்றவை இருப்பதால் கருப்பட்டி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதுவுகிறது. மேலும் கருப்பட்டியில் பற்பல விட்டமின்களும், மினரல் சத்துக்களும் அதிகமாக உள்ளன. இதில் இருக்கும் 'கிளைசீமி இன்டெக்ஸ்' உடலில் உள்ள சர்க்கரை அளவை, வெகு விரைவாக குறைக்கிறது.

மேற்கூறிய இந்த பொருட்களை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை வெகு விரைவாக குறைத்து ஆரோக்கியமாக வாழுங்கள்!

click me!