சிக்கனை இப்படி செய்து தந்தா சும்மாவே சாப்பிடுவாங்க!
சிக்கன் கீமாவை வீட்டில் செய்யும் பொழுதே கமகம என்று மணமணக்கும் இதனை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் விதமாக இருக்கும் இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
வழக்கமாக நாம் சப்பாத்தி, புல்கா போன்றவற்றிக்கு வெஜ் குருமா, சிக்கன் குருமா அல்லது கிரேவி வைத்து சாப்பிடுவோம். இதனையே அடிக்கடி செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். ஆகையால் இன்று நாம் சப்பாத்திக்கு சூப்பரான ஒரு சைட் டிஷ் ரெசிபியை தான் பார்க்க உள்ளோம்.இதனை ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் கேட்டு விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அலாதியாக இருக்கும்.
சிக்கன் கீமாவை வீட்டில் செய்யும் பொழுதே கமகம என்று மணமணக்கும் இதனை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் விதமாக இருக்கும் இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் கீமா - 1/2 கிலோ
பட்டை- 1 இன்ச்
கிராம்- 2
ஏலக்காய் -1
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
தயிர் - 1 கப்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
மல்லித்தழை - கையளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
என்ன! பூசணிக்காயில் கட்லெட்டா! பார்க்கலாம் வாங்க!
செய்முறை :
முதலில் சிக்கன் கீமாவை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். கொள்ளவும். தக்காளி,வெங்காயம், மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின், கிராம், பட்டை, ஏலக்காய்ஆகியவை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்தாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். பின் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து அது நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும்.
பின்பு தயிர், மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் அலசி வைத்துள்ள சிக்கன் கைமாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு தூவி ஒரு தட்டு போட்டு மூடி விட வேண்டும்.
சுமார் 15 நிமிடங்கள் வரை அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து நீர் வற்றி எண்ணெய் பிரிந்து கெட்டியாக மாறும் வரை வைத்து பிணடபிள் இருந்து இறக்கி விட வேண்டும். இறுதியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் அட்டகாசமான சிக்கன் கீமா ரெசிபி ரெடி!