வீட்டு வைத்திய முறைகளால் குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னையை சரிசெய்யலாம்- இதோ வழிமுறை..!!

First Published Sep 9, 2022, 6:54 PM IST

இன்றைய உலகில் சராசரியான நபரில் இருந்து பல்வேறு துறை சார்ந்த பொறுப்புகளை வகிப்பவர் வரை அனைவருக்கும் ரத்தம் அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதாவது ரத்த அழுத்தம் 90/60 mmHg அளவு இருந்தால், அது குறைவான ரத்தம் அழுத்தம் என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது தலை கிறு கிறு என்று இருக்கும், வேறு வேலை எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகும். இன்னும் பல்வேறு அறிகுறிகள் ஏற்படக்கூடும். வயதானவர்கள், புதியதாக பூப்பெய்திய சிறுமிகளுக்கு குறைந்த ரத்த அழுத்தம் நிலவும். இது மிகவும் தீவரமடைவதற்கு முன்பு, வீட்டளவில் இருக்கும் வைத்திய முறைகளை கொண்டு இப்பிரச்னையை எப்படி சரிசெய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 
 

ரத்த அழுத்தம் குறைவதற்கு காரணம்

ஒரு தனிநபருக்கு ரத்த அழுத்தம் குறைவதற்கான முழு முக்கிய காரணம் குறித்து இதுவரை ஆய்வாளர்களால் கண்டறியப்படவில்லை. அதனால் இதற்கு மருத்துவ ரீதியில் தீர்வு சொல்வது சற்று கடினமான காரியமாக உள்ளது. இரத்த நாளங்களை விரிவுபடுத்துதல், குறிப்பிடத்தக்க மருந்துகளை உட்கொள்வது, இருதயம் தொடர்பான பிரச்னைகள், கர்ப்பமடைவது, குறைந்த இரத்த சர்க்கரை, ஹைப்போ தைராய்டிசம் உள்ளிட்ட காரணங்களால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
 

நிறைய தண்ணீர் குடியுங்கள்

போதுமான அளவில் தண்ணீர் அருந்துவது, உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும். உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் 300 மி.லிட்டர் முதல் 500 மி.லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. இதனால் சாப்பிட்ட பிறகு ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும் பிரச்னை ஏற்படாது.

அளவாக சாப்பிடுங்கள்

அதிக அளவு உணவு சாப்பிட்டால், அதை தொடர்ந்து ஹைபோ டென்ஷன் ஏற்படக்கூடும். முடிந்தவரை அளவாக சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இம்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நல்ல உறக்கம்

உணவு சாப்பிட்டவுடன் உடலில் ரத்தத்தின் அழுத்தம் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை குறைந்து காணப்படும். இதனால் உணவு எடுத்துக்கொண்டவுடனே படுத்துவிடக்கூடாது. கூடுமான வரை 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருக்க வேண்டும். அதை தொடர்ந்து படுத்துக் கொண்டல் பிரச்னையில்லை. சாப்பிட்ட உடனே படுத்துக்கொண்டாலோ அல்லது உட்கார்ந்துகொண்டுவிட்டாலோ போஸ்ட்ராண்டியல் ஹைபோடென்ஷன் என்கிற பாதிப்பு உருவாகும்.

கார்போஹைட்ரேட்டு உணவுகளை குறையுங்கள்

கோதுமை ரொட்டி, அரிசி, சக்கரையுடன் கூடிய பானங்கள் மற்றும் உருளைக் கிழங்குகளில் போதுமானவரை கார்ப்போஹைட்ரேட்டுக்கள் உள்ளன. அவை ரத்த அழுத்தத்தைக் தடாலடியாக குறைத்துவிடும்.  அதற்கு பதிலாக புரதம், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள் போன்ற மெதுவாக செர்மானமாகக்கூடிய உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது நன்மையை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும்
 

இந்த 1 பொருளை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் போதும்..உங்கள் வாழ்கை பிரகாசமாக ஜொலிக்கும்..
 

காபி சாப்பிடுங்கள்

உணவுக்குப் பிறகு கேஃபைன் கொண்ட உணவை அல்லது பானத்தை உட்கொள்வது வயதானவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைவதைத் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, ஒரு கப் காபியுடன் உங்கள் உணவை முடிப்பது குறைந்த ரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும்.

click me!