வீட்டுல தேசை மாவு இல்லையா..? 10 நிமிடத்தில் Crispy இன்ஸ்டன்ட் தோசை ரெடி! 

By Kalai SelviFirst Published Apr 30, 2024, 7:00 AM IST
Highlights

உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லாத நேரத்தில் ஈஸியான மொறுமொறுப்பான இன்ஸ்டன்ட் தோசையை 10 நிமிடத்தில் செய்துவிடலாம். ரெசிபி இங்கே..

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவுகளில் ஒன்று 'தோசை'. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி இருக்கையில் காலையில் தோசை சுட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென மாவு காலியாகிவிட்டால் இனி கவலை வேண்டாம். வெறும் 10 நிமிடத்தில் நீங்கள் தோசைக்கான மாவை தயார் செய்துவிடலாம். அது எப்படி என்று நீங்கள் யோசிக்கிறீர்களா..? அதுவும் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அந்த மாவை தயார் செய்து மொறுமொறுப்பான தோசை சுடலாம். 

ரவை தோசையை போலவே இந்த தோசையும் சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். இந்த தோசைக்கு நீங்கள் கார சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த இன்ஸ்டன்ட் தோசையை எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த பதிவில் அதற்கான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. சரி வாங்க.. இப்போது மொருமொருப்பான இன்ஸ்டன்ட் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்: 
அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 1
கேரட் - 1 
வெங்காயம் - 1 
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 ஸ்பூன் 
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
இந்த இன்ஸ்டன்ட் தோசை செய்ய முதலில், அரிசி மாவை எடுத்து அதை மிக்சர் ஜாரில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய கேரட், கொத்தமல்லி, மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் தோசைக்கான மாவு தயார். இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து கல் சூடானதும் அதில் எண்ணெய் தடவி, தயாரித்து வைத்த மாவை அதில் வட்டமாக ஊற்றுங்கள். மேலும் தோசை நன்கு வேக அதை சுற்றி எண்ணெய் ஊற்றி, திருப்பி போட்டு வேக வைத்து எடுங்கள். அவ்வளவுதான் இப்போது மொரு மொருப்பான இன்ஸ்டன்ட் தோசை ரெடி..! எனவே, நீங்கள் அதன்படி செய்து உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.

click me!