இங்கு கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை செய்யாமல் இருந்தால், உடல் எடை குறைப்பு முயற்சி வெற்றி பெறுவது மட்டுமின்றி உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நீங்கள் அதிக உடல் எடையை குறைக்க ஜிம் செய்கிறீர்கள் என்றால்..சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், நீங்கள் உடல் எடையை குறைப்பு செய்யும் போது சில தவறுகளை தவிர்க்க சில குறிப்புகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அது உங்களுக்கு மிகவும் நல்லது.
பொதுவாகவே, உடல் எடையை குறைக்க உணவுமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி போன்றவை செய்யப்படுகின்றன. நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரித்தாலும், நீங்கள் எடை குறையாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. எடை இழப்புக்கு உடற்பயிற்சியுடன், சில பழக்கவழக்கங்களும் முக்கியம். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்..
undefined
உடல் எடை இழப்பில் ஈடுபடும் போது செய்யக்கூடாத தவறுகள்:
குறைவான ஊட்டச் சத்து: எடையை குறைக்கும் போது, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள்.. அதேசமயம் இவற்றை குறைவாக சாப்பிடுகிறீர்கள் என்றால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. குறைவான உணவை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
மது அருந்துதல்: நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால், மது குடிப்பதை உடனே நிறுத்துங்கள். தினமும் அதிகமாக மது அருந்துவதால் உடல் எடை ஒருப்போதும் குறையாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதனால் உடல் எடை மேலும் அதிகரிக்கும். நீங்கள் விரும்பினால், உணவுக்கு முன் 1 கிளாஸ் ஒயின் அல்லது சிறிதளவு மது அருந்தலாம். ஆனால், அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
நீரிழப்பு: உடல் எடையை குறைக்க நினைப்பார்கள் உடலில் உள்ள நீரிழப்புக்கு முதலில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது பசியைக் குறைத்து நல்ல கலோரி அளவை அதிகரிக்கிறது.
மன அழுத்தம் மேலாண்மை: கோபம், பதட்டம், மன அழுத்தம் போன்றவை நம் உடலை மிகவும் பாதிக்கும் என்பது நம் அனைவரும் அறிந்ததே.. அதிக கலோரிகள் உள்ள குப்பை உணவுகளை சாப்பிடுவது மோசமான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தும். பசி இல்லாவிட்டாலும், அதிகமாக உண்ணும் வாய்ப்பு அதிகம். எனவே, உங்கள் எடை இழப்புக்கு மன அழுத்தத்தைக் குறைப்பது மிகவும் முக்கியமான ஒரு காரணியாகும்.
புரோட்டீன் குறைவாக சாப்பிடுவது: எடை இழப்புக்கு குறைவான புரதம் சாப்பிடுதல் மிகவும் அவசியம். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் 25 முதல் 30 சதவீதம் புரதம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வழியில் நீங்கள் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கலோரிகளை சுலபமாகக் குறைக்கலாம். அதுபோல், வளர்சிதை மாற்றத்தை 80-100 கலோரிகளால் அதிகரிக்க முடியும். இது அதிகப்படியான உணவைத் தடுக்கிறது. எப்போதும் முழுமையின் நீண்டகால உணர்வைத் தருகிறது. புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மேலே சொன்ன தவறுகளை நீங்கள் செய்யாமல் இருந்தால், உங்களது உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவது மட்டுமின்றி உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.