Palm Juice : வெயிலில் குழு குளுனு இருக்க 'பதநீர்' குடிங்க... இதில் இவ்வளவு நன்மை இருக்கா..?

By Kalai SelviFirst Published Apr 30, 2024, 4:29 PM IST
Highlights

வாய்ப்புண், குடல் புண்கள் ஆகியவற்றை ஆற்றும் குணமுடையது பதநீர். அதுமட்டுமின்றி, இது  பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அவை..

தற்போது கோலி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, இந்த பருவத்தில் உடலை புத்துணர்ச்சியாக 'பதநீர்' தினமும் குடியுங்கள். இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது உடலுக்கு ஊட்டம் அளிப்பது முதல் இயற்கையான ஆற்றலை அதிகரிப்பது வரை பல நன்மைகளை இந்த ஆரோக்கிய பானம்  கொண்டுள்ளது. 

பதநீர் என்றால் என்ன?
பதநீர் மிகவும் ஆரோக்கியமான மற்றும் இனிப்புச் சுவை கொண்ட பானம் ஆகும். இது உடலுக்கு மிகவும் நல்லது. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பானத்தில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்தால் உருவாவது தான் 'பதநீர்' என்று அழைக்கப்படுகிறது.

கோடைகாலத்தில் தினமும் பதநீரை அளவுடன் குடித்து வந்தால் உடலில் உஷ்ணம் நீக்கி உடல் குளிர்ச்சியாக இருக்கும். வாய்ப்புண், குடல் புண்கள் ஆகியவற்றை ஆற்றும் குணமுடையது இந்த பதநீர். அதுமட்டுமின்றி, இது  பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

ஊட்டச்சத்துக்கள்: பதநீரில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை உள்ளன.

இதையும் படிங்க: கொளுத்தும் வெயிலில் உடலில் பிரச்சினையா?..அப்போ இந்த பழத்தை சாப்பிடுங்க...உடனே தீர்வு கிடைக்கும்..?

பதநீர் ஆரோக்கிய நன்மைகள்: 

நீர் சத்து குறைபாடு: கோடையில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது வழக்கம். எனவே, உடலில் நீர் பற்றாக்குறை அல்லது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் போது பதநீர் குடித்தால், அது தண்ணீர் பற்றாக்குறையை போக்கும். 

சிறுநீர் பிரச்சினை: கோடையில் சிறுநீர்vபிரச்சினை வருவது வழக்கம். குறிப்பாக, சிறுநீரில் எரியும் உணர்வு ஏற்பட்டால் அத்தகைய சூழ்நிலையில், பதநீர் குடித்தால் அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

காசநோய்க்கு நல்லது: காசநோய் போன்ற கடுமையான நோய்க்கு சிகிச்சை அளிக்க மக்கள் மருத்துவமனையை நாடுகின்றனர். இந்நோயில், இதிலிருந்து இருந்து நிவாரணம் பெற பதநீர் குடிக்கலாம். இதனை குடிப்பதன் மூலம் காசநோய் போன்ற நோய்கள் விலகும்.

மஞ்சள் காமாலை: மஞ்சள் காமாலை நோயாளிகளும் பதநீர் குடிக்கலாம்.. அது அவர்களுக்கு மிகவும் நல்லது.

கண் பிரச்சினை: கண் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த பதநீர் குடிக்கலாம். இதனால் பார்வை அதிகரிக்கும்.

இதையும் படிங்க: பனை மரத்தில் மொத்தம் எத்தனை வகைகள் இருக்குனு இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க….

வயிறு தொடர்பான பிரச்சனைகள்: வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு பதநீர் குடிக்கலாம். இது வயிற்றை சுத்தப்படுத்தும் மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தாது. அதுமட்டுமின்றி, இது மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை நீக்குகிறது. மேலும் வயிற்றை குளிர்விக்கிறது. 

இரத்தம் அதிகரிக்கும்: உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பதநீர் குடிக்கலாம். இது உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும். பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் பிரசவத்தின் போது பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே உடலில் போதுமான அளவு இரத்தத்தை அதிகரிக்க பதநீர் குடிப்பது நல்லது.

எடையை அதிகரிக்கும்: உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த பானத்தை குடித்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும். ஆனால், அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம்; ஒன்று அல்ல இரண்டு கிளாஸ் மட்டுமே குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மீறினால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அழகுக்கு: பதநீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நகங்கள், முடி மற்றும் சருமம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பல்வேறு செல்கள் சரியாகச் செயல்படவும் உதவும்.

எலும்பு ஆரோக்கியம்: எலும்புத் தேய்மானம் போன்ற எலும்புத் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்க இந்த பானம் உதவுகிறது. ஏனெனில் இதில் போதுமான அளவு கால்சியம் உள்ளது. அதுமட்டுமின்றி, இதிலிருக்கும் காலிசியம் பற்களை பலப்படுத்தும். 

இதய ஆரோக்கியம்: இதய நோய் அபாயத்தை தவிர்க்க பதநீர் குடிப்பது மிகவும் நல்லது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. காரணம் இதில் இருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

தாய்ப்பால் சுரக்க: பாலூட்டும் பெண்களுக்கு பதநீர் மிகவும் நல்லது. ஏனெனில், இதை அவர்கள் குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கப்படும். காரணம் இதில் தாய்ப்பால் உற்பத்திக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!