Ragi Chapathi : பத்தே நிமிடத்தில் ராகி மாவில் சத்தான மற்றும் சுவையான உடனடி டிபன்.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Apr 30, 2024, 8:00 AM IST

பல சத்துக்கள் நிறைந்த ராகி மாவில் சப்பாத்தி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


உங்க வீட்ல எப்போதும் குழந்தைகளுக்கு காலை உணவாக இட்லி, தோசை தான் செய்து கொடுத்தால் இந்த பதிவு உங்களுக்கானது தான். இன்று வித்தியாசமான ரெசிபி உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். அதுதான் 'ராகி சப்பாத்தி'. இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ராகியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது இதில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பிற தாதுக்களும் நிறைந்துள்ளது. எனவே, இதை நீங்கள் 
தினமும் காலை உணவாக எடுத்துக்கொண்டால் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். இப்படி பல சத்துக்கள் நிறைந்த ராகி மாவில் சப்பாத்தி எப்படி செய்வது என்று இந்த பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது சரி வாங்க இப்போது இந்த ரெசிபிக்கான செய்முறையை தெரிஞ்சுக்கலாம்.

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
தண்ணீர் - 3/4 கப்
உப்பு, எண்ணெய் - தேவைசெய்முறை

செய்முறை:
ராகி சப்பாத்தி செய்ய முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் இப்போது அதில் எடுத்து வைத்த ராகி மாவை சேர்த்து கைவிடாமல் கிண்டி கொண்டே இருங்கள். குறிப்பாக கட்டி வராமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து அதை கீழே இருக்க வைத்துவிட்டு ஆற விடுங்கள். இப்போது ராகி மாவு சூடு ஆறியதும், அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு, பிசைந்து வைத்துள்ள ராகி மாவில் இருந்து சிறிதளவு மாவு எடுத்து, அதை உருட்டி ராகி மாவில் புரட்டிப்போட்டு பிறகு சப்பாத்தி கட்டையால் உருட்டி எடுத்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் சப்பாத்தி கல்லை வைத்து கல் சூடானதும் அதில் எண்ணெய் தடவி, உருட்டி வைத்த ராகி சப்பாத்தி மாவை அதில் போட்டு இருபுறமும் சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது ஆரோக்கியமான மற்றும் ருசியான ராகி சப்பாத்தி ரெடி!! இந்த ராகி சப்பாத்தியுடன் நீங்கள் தேங்காய் சட்னி அல்லது தக்காளி தொக்கு வைத்து  சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டில் கண்டிப்பாக செய்து பார்த்து உங்களது பதிலை எங்களுக்கு தெரியப்படுத்த மறக்காதீர்கள்..

click me!