மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரை மது போதையில் இருந்த இருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் குமரேசன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த சாலை வழியே மதுபோதையில் வாகனத்தை ஒட்டிக் கொண்டு வந்த அழகப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மற்றும் அவரது நண்பரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
undefined
அப்போது திடீரென காவலரை தாக்கி அருகில் இருந்த கடையின் ஷட்டரில் தள்ளி விட்டுள்ளனர். மேலும் கீழே இருந்த கல்லை எடுத்து அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மது பிரியர் தாக்கியதில் சுய நினைவை இழந்த காவலர் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது என்னோட வளர்ப்பு மகன் சார்; காளையின் பிறந்த நாளுக்காக ஊருகே அன்னதானம் போட்ட சாமானியர்
தொடர்ந்து மேல்சிகிச்சிக்காக அழகப்பனார் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவலரை தாக்கிய நபரை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்திய நபர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நபருக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.