மே தினத்தை முன்னிட்டு 1 ரூபாய்க்கு டீ; உழைப்பாளர்களை கௌரவிக்கும் தனியார் தேனீர் கடை உரிமையாளர்

By Velmurugan s  |  First Published May 1, 2024, 5:26 PM IST

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் அனைவருக்கும் ரூ.1க்கு தேநீர் வழங்கி உழைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்துகிறது மதுரையில் உள்ள நைனாஸ் டீ பார் எனும் தேநீர் கடை.


இந்த பூமியையும், உழைப்பாளர்களையும் எவ்வாறு பிரிக்க முடியாதோ அதேபோன்று உழைப்பாளிகளையும், தேநீரையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. ஒரு குவளை தேநீர் அருந்திவிட்டு நாள் முழுதும் உழைப்பை நல்குகின்ற தொழிலாளர்களை நம் சமூகத்தில் இயல்பாக காண முடியும். அந்த உழைப்பாளர் தினத்திற்கு மரியாதை தரும் விதமாக மே 1 அன்று மட்டும் அனைவருக்கும் வெறும் ரூபாய் 1க்கு மசாலா டீ வழங்கி அசத்துகிறது மதுரையில் உள்ள நைனாஸ் டீ பார் எனும் தேநீர் கடை. 

 தாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்தும், கம்பியால் அடித்தும் கொடூர கொலை; சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்

Latest Videos

இதுகுறித்து நைனாஸ் டீ பார் தேநீர் கடையின் நிறுவனர் நந்தினி கூறுகையில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே எங்களது தேனீர் கடை உள்ளது. எங்களது கடையில் தனிச்சிறப்பு நாங்கள் வழங்கும் மசாலா டீ தான். அதனை விரும்பி அருந்தும் வாடிக்கையாளர்கள் அதிகம் பேர் உண்டு. வெறும் இஞ்சி மட்டுமின்றி 13 வகையான திரிகடுகம் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இந்த தேனீரை ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறோம். இவை அனைத்தையும் நாங்களே தயார் செய்து இந்த மூலிகை தேநீரை விற்பனை செய்து வருகிறோம். 

பிறந்த நாளில் தனது குருமார்களுக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்ற மதுரை தொழிலதிபர்

அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைப்பாளர்களுக்கு மரியாதை தரும் விதமாக ரூபாய் ஒன்றுக்கு இந்த மசாலா டீயை வழங்கி வருகிறோம். இதற்கு முன்பாக காளவாசல் புறவழிச் சாலையில் அமைந்துள்ள எங்களது கடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வந்தோம். தற்போது பெரியார் பேருந்து நிலையத்தில் நாங்கள் இந்த சேவையை செய்து வருகிறோம்.

மே ஒன்றாம் தேதிக்கு முன்பு மூன்று நாட்கள் எங்கள் கடைக்கு வருகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நாங்கள் ஒரு டோக்கன் கொடுப்போம் அந்த டோக்கனை மே ஒன்றாம் தேதி எங்களிடம் கொடுத்து ரூபாய் ஒன்றுக்கு எங்களது தனிச்சிறப்பு மிக்க மசாலா டீயை அருந்தலாம் என்றார்.

click me!