Crime: 20 இடங்களில் வெட்டு காயம்; மதுரையில் பட்ட பகலில் இளைஞர் படுகொலை

By Velmurugan s  |  First Published Apr 27, 2024, 10:37 AM IST

மதுரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞரை படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த அருள்முருகன் (வயது 29). மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 1 மனைவி, 1 குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அருள்முருகன் நேற்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்குவந்த மர்ம கும்பல் ஒன்று அருள்முருகனை தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்னர். 

முட்டை தோசை கேட்ட கணவர்.. கடைக்கு வாங்க சென்ற மனைவி.. சைடு கேப்பில் ரவுடியை கொத்துக்கரி போட்ட கும்பல்!

Tap to resize

Latest Videos

undefined

மேலும் அருள்முருகனின் கையை தனியாக வெட்டியதோடு முகத்தில் 20க்கும் மேற்பட்ட முறை வெட்டி முகத்தை சிதைத்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக அருள்முருகன் உயிரிழந்த நிலையில் அங்கு வந்த கூடல்புதூர் காவல்துறையினர் அருள்முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

#BREAKING: சினிமா பாணியில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.. 20 பேர் படுகாயம்..!

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், மதுரை விரகனூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கல்மேடு பகுதியைச் சேர்ந்த அருள்முருகனின் உறவினரான நவநீதன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்கு பழியாக நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட நவநீதனின் பெரியம்மா மகன்  அருள்முருகன் என்பது குறிப்பிடதக்கது.

click me!