அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு.. உன்னிப்பாக கண்காணித்து வரும் மத்திய அரசு.. வெளியான முக்கிய தகவல்..

By Ramya s  |  First Published Apr 30, 2024, 10:03 AM IST

இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பறவை காய்ச்சல் போன்ற நோய்களின் கண்காணிப்பை அதிகரிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. இளம் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இணை நோய்களை கொண்டவர்கள் ஆகியோர் காய்ச்சலால் அதிக பாதிக்கப்படும் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள் அறிக்கையில் "  பருவகால காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் ஆகிய நோய்களின் நிலைமையை அரசு கண்காணித்து வருகிறது. இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது " H1N1 பாதிப்புகளைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

Vitamin D : வைட்டமின் டி குறைபாடு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.. இயற்கையாகவே அதை எப்படி அதிகரிப்பது?

பறவைக் காய்ச்சல் பற்றிய கவலைகள்

இந்தியாவில், ஜார்கண்ட் போன்ற சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஜார்கண்ட தலைநகரான ராஞ்சியில், ஒரு கோழிப்பண்ணையின் இரண்டு மருத்துவர்கள் மற்றும் 6 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1,745 கோழிகள், 450 வாத்துகள் மற்றும் 1,697 முட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இரண்டு வார்டுகளில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. H5N1 வைரஸ் எனப்படும் பறவை காய்ச்சல் முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது ஆனால் மனிதர்களுக்கும் பரவுகிறது. நோய்வாய்ப்பட்ட பறவைகள் அல்லது அசுத்தமான சூழல்களுடன் நெருங்கிய தொடர்பு ஆகியவை மூலம் மனிதர்களுக்கும் பறவை காய்ச்சல் பரவக்கூடும் என்று கூறப்படுகிறது. 

மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கால்நடைகள் மற்றும் பாலில் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை சுகாதாரப் பணிகள் இயக்குநர் ஜெனரல் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. 

உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்திய ‘முதற்கட்ட அறிக்கையில்’ கூறியது, 2007 ஆம் ஆண்டிலிருந்து மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் H5N1 வைரஸ் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது. எனினும் H5N1 வைரஸால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் அசுத்தமான பாலை உட்கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் புரிந்துகொள்வதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையா பாலை காய்ச்சி குடிப்பது, இறைச்சியை முறையாக சமைப்பது போன்ற நடைமுறைகள் மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும் என்று சுகாதார அமைச்சகம் தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளது. மறுபுறம், நோயாளிகளின் வகைப்படுத்தல், சிகிச்சை நெறிமுறை மற்றும் காற்றோட்ட மேலாண்மை குறித்த வழிமுறைகள் ஆகியவை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) நெட்வொர்க் மூலம் நிகழ்நேர அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் காய்ச்சல் நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Thyroid : தைராய்டு பிரச்சனையா..? அப்ப இந்த 3 பழங்களை கண்டிப்பாக சாப்பிடுங்கள்..ரொம்பவே நல்லது!

பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச தொற்று ஆகும்; இன்ஃப்ளூயன்ஸா A அல்லது H1N1 இன் முதல் பாதிப்பு 2009 இல் கண்டறியப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் பருவகால காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் காணப்படுகின்றன: ஒன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலும் மற்றொன்று மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்திலும் காணப்படுகிறது. தற்போதைக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் பருவகால காய்ச்சல் நிகழ்வுகளில் அசாதாரணமான ஆபத்தான அதிகரிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!