First night: முதலிரவு அன்று யோசிக்காமல் ஆண்கள் செய்யும் தவறுகள்!! காலம் முழுக்க துரத்துமாம்!!

First Published | Apr 25, 2023, 2:39 PM IST

முதலிரவு அன்று தாங்கள் செய்யும் தவறுகளை வாழ்நாள் முழுக்க நினைத்து துன்பப்படுவதாக ஆண்களில் சிலர் பகிர்ந்துள்ளனர்.

திருமண பந்தத்தில் மனதாலும், உடலாலும் இணையும் அற்புதமான நாள் தான் முதலிரவு. அன்றைய தினம் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, இருவரின் விருப்பங்களுக்கும் மதிப்பளித்து உறவு கொண்டால் தான் அந்த தாம்பத்தியம் ஆயுள் முழுக்க நினைத்து பார்க்கும்போது இன்பத்தை கொடுக்கும். இங்கு சில ஆண்கள் முதலிரவு அன்று செய்த தவறுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர். இனிமேல் முதலிரவு அன்றுமட்டுமில்லை, எப்போதும் அந்த தவறுகளை செய்யக் கூடாது என்பதற்கான அனுபவ பாடம் தான் இவை. 

ஏமாற்றுதல்! 

முதலிரவு அன்றே மனைவியை ஏமாற்றினால் என்ன ஆகும் தெரியுமா? இந்த ஆண் சொல்வதை கேளுங்கள்:“முதலிரவுக்காக ஒருவருக்கொருவர் விருப்பங்களை முன்னமே கேட்டு கொண்டோம். நான் என் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைக்க வேண்டும் என என் மனைவி அறிவுறுத்தினாள். உடலுறவில் அந்தரங்க சுத்தம் முக்கியமல்லவா! எனது சோம்பேறித்தனத்தால் அதை நான் செய்யவில்லை. முதலிரவில் நான் நெருங்கி செல்லும் போது, ​​​​என் மனைவி கொஞ்சம் பின்வாங்கி, நான் ஏதோ பெரிய விஷயத்தில் அவளிடம் பொய் சொல்லி ஏமாற்றியது போல ஒரு பார்வை பார்த்தாள். நான் கேட்டதையெல்லாம் அவள் செய்தாள். ஆனாலும் அவள் ஏமாற்றப்பட்டாள் என்ற உண்மை கசந்தது. இது வெறும் சுகாதார பிரச்சினையை மட்டுமல்ல, நான் சொன்ன பொய் அவளை காயப்படுத்தியது தான் உண்மை. இது எங்கள் திருமண உறவிற்கு மோசமான தொடக்கமாகும்"என்கிறார். சின்ன சின்ன புரிதல்கள் தான் உங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கும். ஒரு பொய்க்கு ஒரு உறவை முறிக்கும் சக்தியும் உண்டு.  

Tap to resize

எதிர்கால பயம்! 

சிலர் காதல் திருமணங்கள் செய்வார்கள். அதில் முதலிரவுக்கு முன்பே உறவு வைத்திருப்பார்கள் ( இது எல்லோருக்குமானது அல்ல, ஒரு சிலர் மட்டும்) அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அது முதலிரவாக இருப்பதில்லை. ஆனாலும் அந்த நாள் திருமணம் நடந்த பின்னர் வரும் முதல் நாள் அல்லவா! அப்படி ஒரு தம்பதியின் முதலிரவு கதை தான் இது"திருமணமான ஆணாக எனக்கு பல பொறுப்புகள் இருந்தது. அதனால் ரொம்ப அழுத்தத்தில் இருந்தேன். என் மனைவிக்கும் அந்த அழுத்தம் இருந்தது. ஆடைகளிலும், பாலியல் முன்விளையாட்டிலும் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தோம். இப்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அதை நினைத்து பார்க்கும்போது, ​​பலர் ஆச்சரியமாக சொல்லி கண்கள் விரிய விவரிக்கும் அந்த இரவை நாங்கள் பெரிதாக கொண்டாடவில்லை என்று தோன்றுகிறது".. ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நமக்குனு இருப்பது ஒரு முதலிரவு தான்... பார்த்து நடந்துக்கோங்க மக்களே! 

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாத பெண்கள்.. கணவரை பற்றி என்ன நினைக்கிறார்கள்!?

தூக்கம்! 

முதலிரவில் கணவன் தூங்கினால்..."அந்த அழகான முதலிரவு இன்றும் நினைவிருக்கிறது. ஆனால் அதை நான் தவறவிட்டு விட்டேன். எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ஹோட்டலில் முன்பதிவு செய்திருந்தார்கள். நான் திருமண களைப்பில் ஆடைகளை களைந்து விட்டு உடனடியாக உறங்கி விட்டேன். என் மனைவி என்ன நினைக்கிறாள்? என்பது குறித்து அவளிடம் எதையும் கேட்கவே இல்லை. அது எங்களுடைய முதலிரவு. அந்த நாளில் என் மனைவியிடம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டேன். என்னுடைய மனைவி மிகவும் புரிதல் உடைய பெண். அவளுடைய முகத்தில் சோகம் இருந்தாலும், காலையில் அவள் என்னிடம் எதையும் பேசவில்லை. அன்று அவள் அணிந்திருந்த லெஹங்கா மிகவும் எடையுடையது. அதிகமான நகைகளால் அவளுடைய உடல் சோர்ந்து இருந்தது. இது எல்லாவற்றையும் நான் அறிந்திருந்தும் அவளுக்கு உதவாமல் அப்படியே தூங்கிவிட்டேன். இப்போது 5 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இந்த விஷயம் என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது. 

த்ரில்! 

தன்னுடைய மனைவி உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத போது, அவளுக்கு தெரியாமல் அதற்கு முயற்சி செய்வதால் என்ன நடக்கும் தெரியுமா? "முதலிரவில் ஆணுறையை பயன்படுத்த என் மனைவி அறிவுறுத்தினாள். எனக்கு எதுவும் இல்லாமல் இணைந்திருக்க விருப்பமாக இருந்தது. அவளுக்கு தெரியாமல் ஆணுறையை நீக்கிவிட்டு ஒன்றாக இருந்தேன். இதற்காக 1 வாரமாக அவள் என்னிடம் பேசவில்லை. இதனிடையே அவள் கருத்தரிக்கவும் செய்துவிட்டாள். நான் கருகலைப்பு செய்ய பரிந்துரைத்தேன். ஆனால் மருத்துவர் அவளுடைய உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்று கூறிவிட்டார். இதனால் அந்த குழந்தையை அவள் பெற்றுக் கொண்டாள். இப்போது வரை நான் சுயநலவாதியாக இருந்தது குறித்து எனக்கு குற்றவுணர்ச்சியாக உள்ளது" என்கிறார். 

இதையும் படிங்க: Nude photo: பிரிந்த தம்பதி! நிர்வாண போட்டோக்களால் மீண்டும் இணைந்தார்கள்.. அதுவும் எப்படி தெரியுமா?

Latest Videos

click me!