மகளிர் சுய உதவி குழுவிற்கு சூப்பர் செய்தி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பெண்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு

Published : Mar 11, 2025, 10:50 AM ISTUpdated : Mar 11, 2025, 02:20 PM IST

தமிழக அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி. 100 கி.மீ வரை கட்டணமின்றி பொருட்கள் கொண்டு செல்லலாம்.

PREV
16
மகளிர் சுய உதவி குழுவிற்கு சூப்பர் செய்தி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பெண்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு

Magalir suya uthavi kulu : மகளிர் சொந்தமாக முன்னேற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படுகிறது. மேலும் சொந்தமாக உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மகளிர் சுய உதவி குழுக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர  ரெட்டி அரசு போக்குவரத்து கழக இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

சுய உதவிக்குழுக்கள் (SHGs) உறுப்பினர்கள் தங்கள் உற்பத்திப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு சந்தைகளிலும் தங்கள் சொந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும். 

26
மகளிர் சுய உதவி குழுவிற்கு புதிய சலுகை

இந்த முயற்சியில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சில சமயங்களில் மாவட்டத்திற்குள் தங்கள் விளைபொருட்களுடன் பயணிப்பதிலும், இது தொடர்பான பல்வேறு கண்காட்சிகளுக்காக மாவட்டங்களுக்கு வெளியே வரும்போதும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் மூலம் இலவச போக்குவரத்து உதவியை, பெண்கள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும்,

36
25 கிலோ வரை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி

எனவே  நிலையான இயக்க நடைமுறைகளை அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்திட மேலாண் இயக்குனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு அடையாள அட்டை வைத்திருக்கும் மகளிர், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சாதாரண கட்டண புறநகர் பேருந்துகளிலும், சுய உதவிக்குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை மட்டும். 100 கி.மீ வரை சுமை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து நகரப் பேருந்துகளிலும், (A/C பேருந்துகள் நீங்களாக) சுய உதவிக்குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை மட்டும் சுமை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

46
நிபந்தனைகள் என்ன.?

சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல "கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு" நடத்துனர் வழங்க வேண்டும்.

சுய உதவிக்குழு பெண் பயணிகள் கொண்டுவரும் சுமைகளை பேருந்துகளில் ஏற்றி, இறக்குவதற்காக, போதுமான நேரத்தை வழங்கி பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டும்.

பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துனர்கள் சுய உதவிக்குழு பெண் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

சுய உதவிக்குழு பெண் பயணிகள் எடுத்து செல்லும் சுமைகள் மற்ற சக பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

 

 

56
பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது

சகபயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது.

பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாது.

அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.

 பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது.  இந்த உத்தரவு குறித்து அனைத்து பேருந்து முனையங்களில் அறிவிப்பு பலகைகள் மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

66
ஓட்டுனர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்தல்

சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்லும் வகையில்  ஓட்டுனர்கள், நடத்துநர்கள், பயணச்சீட்டுப் பரிசோதகர்கள், நேரக்காப்பாளர்கள், கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், மற்றும் அனைவருக்கும் விளக்கிக் கூறி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், சுய உதவிக்குழு பெண் பயணிகளின் சுமைகளுக்கு கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories