ஹமாஸுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக என்ன பாதிப்பு என்பது தெரியவில்லை. ஆனால், காஸாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. காஸாவில் எஞ்சியுள்ள பிணையாளிகளை விடுவிக்கும்படி ஹமாஸை நெருக்குவதற்கு இஸ்ரேல் மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படுகிறது