தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 8020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
தங்கம் என்றாலே அனைத்து பெண்களுக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் மற்ற நாட்டு மக்களைவிட இந்திய மக்களிடம் தான் டன் கணக்கில் தங்க நகைகளை வாங்கி குவித்துள்ளனர். தங்க நகைகளை ஆடம்பர பொருளாக இருந்தாலும் திருமணங்கள், விஷேச நாட்களின் தங்க நகைகளின் பயன்பாடு அதிகமாக இந்தியாவில் உள்ளது. எனவே தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள்.
24
உச்சத்தை தொட்ட தங்கம் விலை
இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 55ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து ஒரு சவரன் 65ஆயிரத்தை எட்டியுள்ளது. எனவே தங்கம் விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
34
ஏறி இறங்கும் தங்கம் விலை
கடந்த சில நாட்களாக் ஏறி இறங்கும் தங்கம் விலை இன்று எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,050-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. எனவே இன்றும் தங்கம் விலை உயருமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது தங்கம் விலை.
44
இன்றைய தங்கம் விலை என்ன.?
இன்று கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 8ஆயிரத்து 20 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 64,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு இன்றைய தினம் லக்கியான நாளாகவே அமைந்துள்ளது.