Ilaiyaraaja and AR Rahman Music For Same Movie : 1976-ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, அதில் இருந்து 15 ஆண்டுகள் இசையுலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார். இவரது இசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல இசையமைப்பாளர்கள் திணறிய நிலையில், ஏ.ஆர்.ரகுமான் என்கிற இசைப்புயல் வந்து ராஜாவை முதல் படத்திலேயே ஓவர்டேக் செய்துவிட்டார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் படமான ரோஜா, தேசிய விருது வென்று அசத்தியது.
24
AR Rahman, Ilaiyaraaja
அப்போது கூட ரகுமானுக்கு போட்டியாக இருந்தது இளையராஜா தான். இளையராஜாவின் தேவர்மகன் படமும் ரகுமானி ரோஜா படத்துக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. அந்த சமயத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இளையராஜாவை தோற்கடித்து தேசிய விருதை தட்டிச் சென்றார் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகும் முன்னர் இளையராஜாவிடம் கீபோர்டு வாசித்து வந்தார். புன்னகை மன்னன் உள்பட பல படங்களுக்கு ரகுமான் கீபோர்டு பிளேயராக பணியாற்றி இருக்கிறார்.
இசையமைப்பாளராகும் முன் இளையராஜாவின் பல படங்களில் பணியாற்றிய ஏ.ஆர்.ரகுமான், இசையமைப்பாளர் ஆன பின் இருவரும் ஒரே படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதுதான் காதலுக்கு மரியாதை. நடிகர் விஜய், நடிகை ஷாலினி நடிப்பில் வெளியான இப்படத்தை மலையாள இயக்குனர் பாசில் இயக்கி இருந்தார். இப்படம் முதன்முதலில் மலையாளத்தில் தான் எடுக்கப்பட்டது. அங்கு சூப்பர் ஹிட் ஆன பின்னர் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். இப்படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் இன்றளவும் கொண்டாடப்படும் மாஸ்டர் பீஸ் பாடல்களாக உள்ளன.
44
Isaipuyal and Isaignani
தமிழில் காதலுக்கு மரியாதை படம் ஹிட்டானதை தொடர்ந்து அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தனர். இந்தியில் Doli Saja Ke Rakhna என்கிற பெயரில் ரீமேக் ஆன இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கினார். இதில் ஹீரோவாக அக்ஷய் கண்ணாவும், ஹீரோயினாக ஜோதிகாவும் நடித்திருந்தார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்திருந்தார். அவரது இசையில் உருவான அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இப்படி ஒரே கதைக்களத்தில் உருவான படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இளையராஜா இசையமைத்துள்ள சம்பவம் ஒரு அரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இது இன்னொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால், காதலுக்கு மரியாதை இந்தி ரீமேக்கிற்காக போட்ட மெட்டுக்களை தான் ஏ.ஆர்.ரகுமான் தமிழில் பிரசாந்த் நடித்த ஜோடி பட பாடல்களை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.