சினிமா பிரபலம் என்றால் சேற்றை வாரி அடிப்பீர்களா? பாடகி கல்பனா ஆவேசம்

Published : Mar 11, 2025, 10:10 AM IST

பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது தன்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

PREV
14
சினிமா பிரபலம் என்றால் சேற்றை வாரி அடிப்பீர்களா? பாடகி கல்பனா ஆவேசம்

Singer Kalpana Press Meet : பாடகி கல்பனா ராகவேந்தர் மார்ச் 4ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹைதராபாத்தில் நிசாம்பேட்டையில் உள்ள வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இது உண்மைக்கு புறம்பானது என்று கல்பனாவின் உறவினர்களே தெரிவித்தனர். அம்மா தூக்க மாத்திரை சாப்பிட்டதால் டோஸ் அதிகமானதாகவும், தற்போது பரவும் செய்திகள் தவறானவை என்றும் கல்பனாவின் மகள் ஊடகங்களிடம் கூறினார்.

24
Singer Kalpana

இப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கல்பனா ஊடகங்களை சந்தித்துள்ளார். அப்போது கோபத்துடன் கல்பனா பதிலளித்தார். சில ஊடகங்கள் குறிப்பாக யூடியூபர்கள் என் மோசமான நிலையில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை பரப்பியதாக கல்பனா குற்றம் சாட்டினார். பலர் எனக்கு நடந்தது இதுதான் என்று வீடியோ போட்டார்கள். உண்மையில் எனக்கு என்ன நடந்தது என்று அவர்களுக்கு எப்படி தெரியும் என கல்பனா கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்... மகளால் மன அழுத்தம்! தற்கொலை முயற்சியா? என்ன நடந்தது? பாடகி கல்பனா பரபரப்பு விளக்கம்!

34
Singer Kalpana Press Meet

தொடர்ந்து பேசிய அவர், நேரடியாக சொல்லாமல் எனக்கு நடந்தது பற்றி பொய் சொல்வது ஏன். நானும் ஊடகங்களை எப்போதும் மதிப்பவள், அவர்கள்தான் என் குரலை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் என்மீது சேற்றை வாரி எறிகிறார்கள். அது வாழ்க்கையில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை சரி செய்ய அதிக நேரம் எடுக்கும். அதை நீங்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் என்று கல்பனா ராகவேந்தர் காட்டமாக கூறினார்.

44
Singer Kalpana Raghavendar

ஏசியானெட் ஸ்டார் சிங்கர் சீசன் 5ல் வெற்றியாளரான கல்பனா பிரபல பின்னணி பாடகர் டி.எஸ்.ராகவேந்திராவின் மகள். ஐந்து வயதில் இருந்து இசைத்துறையில் தீவிரமாக இருக்கும் கல்பனா இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி உள்பட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றாரா? உண்மையை புட்டு புட்டு வைத்த மகள்

click me!

Recommended Stories