Sardaar 2 dubbing update: What is the shooting status? : பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சர்தார் 2. இப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
சர்தார் திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு கடந்த சில மாதங்களாக அப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறது. சர்தார் முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தில் ரெஜிஷா விஜயன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
24
Sardar 2 Update
சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அண்மையில் ஷூட்டிங்கின் போது நடிகர் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். கார்த்தியின் காலில் காயம் சரியாகும் வரை ஷூட்டிங் நடைபெறாது என கூறப்படுகிறது. இந்த நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பாத படக்குழு தற்போது அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளது.
அதன்படி சர்தார் 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். நடிகர் கார்த்தி, இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர். நேற்று பூஜையுடன் சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கி உள்ள படக்குழு, முதலில் நடிகர் கார்த்தி நடித்த காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்து வருகின்றனர். இதையடுத்து விரைவில் கார்த்தியின் காலில் காயம் சரியாகி அவர் குணமடைந்த உடன் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
44
Sardar 2 Karthi
சர்தார் 2 படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளை மைசூர் உள்பட சில வெளி மாநிலங்களில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். சர்தார் 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு உள்ளது. அநேகமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு சர்தார் 2 திரைப்படம் திரைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தை போல் இந்த படமும் மாஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.