- Home
- Cinema
- Karthi : விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்தி - என்ன ஆச்சு? படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு!
Karthi : விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்தி - என்ன ஆச்சு? படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு!
சர்தார் 2 (Sardar 2) படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கிய நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு பிறகு, கார்த்தி நடித்த படங்கள் பெரிய அளவிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. ஜப்பான் படமாகட்டும், மெய்யழகன் படமாகட்டும் பெரியலவிற்கு ஹிட்டை இவருக்கு கொடுக்க தவறியது. இந்த 2 படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்திற்கு பிறகு 'வா வாத்தியார்' மற்றும் 'சர்தார் 2' படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சர்தார் 2 பட பிரபலங்கள்
இயக்குநர் பிஎஸ் மித்ரன் (PS Mithran) இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் சர்தார். இந்தப் படத்தில் கார்த்தி ஏஜெண்ட் சந்திர போஸ் (சர்தார்) மற்றும் இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் என்று 2 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படத்தின் 2ஆவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.
விக்ரம் பட கிளைமாக்ஸ்.. அது தான் கைதி 2வின் கதையா? அண்ணனோடு மல்லுக்கட்டப்போகும் கார்த்தி!
கார்த்திற்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா:
இந்தப் படத்தில் கார்த்திற்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன்,பாபு ஆண்டனி, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திலும் கார்த்தி இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் மற்றும் ஏஜெண்ட் சர்தார் சந்திரபோஸ் என்று இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதுவும் சண்டைக்காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்திக்கு என்ன ஆச்சு
மைசூரில் எடுக்கப்பட்டு வரும் சண்டைக்காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் கார்த்திக்கிற்கு காலில் காயம் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படப்பிடிப்பு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கார்த்திக்கிற்கு காலில் வீக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரை மருத்துவர்கள் ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் என கூறப்படுகிறது.