MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்ரம் பட கிளைமாக்ஸ்.. அது தான் கைதி 2வின் கதையா? அண்ணனோடு மல்லுக்கட்டப்போகும் கார்த்தி!

விக்ரம் பட கிளைமாக்ஸ்.. அது தான் கைதி 2வின் கதையா? அண்ணனோடு மல்லுக்கட்டப்போகும் கார்த்தி!

Kaithi 2 Movie : தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்று தான் கைதி 2. கார்த்தி நடிப்பில் இந்த திரைப்படம் விரைவில் உருவாக உள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 04 2024, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kaithi Movie

Kaithi Movie

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து "கூலி" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன்னதாகவே உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் ஆகியோரை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லோகேஷ் கனகராஜின் அந்த "சினிமாடிக் யுனிவர்ஸ்" ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை கடந்த சில ஆண்டுகளாகவே பெற்று வருகிறது என்றால் அது மிகையல்ல. 

ஆனால் இவை அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியாக அமைந்தது பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான "கைதி" என்கின்ற திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இருந்து தான் லோகேஷ் கனகராஜின் அந்த "சினிமாடிக்கெட் யுனிவர்ஸ்" ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் விரைவில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் இனி நடிக்கமாட்டாரா? இதெல்லாம் தண்ணீரில் தான் எழுதணும் - த.வெ.க தலைவரை கிண்டலடித்த தமிழிசை!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Shruti Haasan

Shruti Haasan

தளபதி விஜயின் "மாஸ்டர்" பட வெற்றிக்கு பிறகு, உலகநாயகன் கமல்ஹாசனோடு இணைந்து மிகப்பெரிய கமர்சியல் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து மீண்டும் "லியோ" என்கின்ற திரைப்படத்தில் தளபதியின் விஜயுடன் அவர் இணைந்தார். அதுவே தளபதி விஜய்யோடு அவர் இணைந்து பயணித்த இறுதி படமாக தற்பொழுது மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. "லியோ" திரைப்பட பணிகளை முடித்த லோகேஷ் கனகராஜ், அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை "கூலி" என்ற திரைப்படத்தில் இயக்க தயாரானார். 

அண்மையில் தான் இந்த திரைப்படத்தில் நடிக்கின்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. கன்னட திரை உலகிற்கிலிருந்து உபேந்திரா, மலையாள திரை உலகில் இருந்து சௌபின் சாஹிர், தெலுங்கு திரை உலகில் இருந்து நாகர்ஜுன், தமிழ் திரை உலகில் இருந்து சத்யராஜ் என்று பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சுருதிகாசனும் இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

34
Coolie Movie

Coolie Movie

இந்த சூழலில் தன்னுடைய "கூலி" திரைப்பட பணிகளை முடித்த உடனேயே கைது படத்தின் இரண்டாம் பாக பணிகளை தான் துவங்க உள்ளதாக அண்மையில் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். ஆனால் கூலி திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருந்த ரஜினிகாந்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனை சென்று திரும்பி உள்ள அவர், சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். ஆகையால் குறிப்பிட்ட தேதியில் கூலி திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் முடிக்கப்படுமா? அல்லது இப்படத்தின் பணிகள் நீளுமா? என்பது சந்தேகத்திற்கு இடமாக மாறி உள்ளது. இந்த திரைப்படத்தை முழுமையாக முடித்து அதனுடைய ரிலீஸ் தேதியை உறுதி செய்த பிறகு தான், லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் இரண்டாம் பாக பணிகளை தொடர செல்வார்.

44
Rolex Movie

Rolex Movie

இதற்கிடையில் கைதி திரைப்படம் குறித்து வெளியான சில தகவல்களின்படி.. விக்ரம் படத்தில் வரும் கிளைமாக்ஸ் கட்சியில் இருந்து தான் கைதி 2 படம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விக்ரம் பட இறுதி கட்சியில், டில்லி என்ற கதாபாத்திரத்தில் கைதி படத்தில் நடித்த கார்த்தியின் ரெஃபரன்ஸ் காண்பிக்கப்பட்டிருக்கும். திருச்சியில் ரோலக்சின் கடத்தல் பொருட்களை சிக்கவைத்து டில்லி தான் என்பது போல கதை அமைக்கப்பட்டிருக்கும். 

ஆகவே கைதி 2 என்பது, அண்ணன் ரோலக்ஸ் (சூர்யாவிற்கும்) தம்பி டில்லி (கார்த்தி)க்கும் நடக்கும் கதையாக இருக்கும் என்று சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையேடு உணர்வு பூர்வமாக நன்றி கூறிய ரஜினிகாந்த்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
கார்த்தி (நடிகர்)
லோகேஷ் கனகராஜ்
சூர்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved