MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் இனி நடிக்கமாட்டாரா? இதெல்லாம் தண்ணீரில் தான் எழுதணும் - த.வெ.க தலைவரை கிண்டலடித்த தமிழிசை!

விஜய் இனி நடிக்கமாட்டாரா? இதெல்லாம் தண்ணீரில் தான் எழுதணும் - த.வெ.க தலைவரை கிண்டலடித்த தமிழிசை!

Tamilisai About TVK Vijay : பிரபல அரசியல் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் குறித்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

3 Min read
Author : Ansgar R
Published : Oct 04 2024, 06:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan

வருகின்ற அக்டோபர் மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த இருக்கிறார் தளபதி விஜய். இந்த ஆண்டின் துவக்கமே தளபதி விஜயின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மிகுந்த ஆண்டாகவே தொடங்கியது. காரணம் தான் அரசியலில் களம் இறங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் தளபதி விஜய். உண்மையில் அவர் எடுத்த அந்த முடிவு பலர் எதிர்பார்த்தது தான் என்றாலும் கூட, யாருமே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்கை முன் வைத்தார் தளபதி விஜய்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையேடு உணர்வு பூர்வமாக நன்றி கூறிய ரஜினிகாந்த்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
TVK Vijay

TVK Vijay

அது தான் ஏற்கனவே அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இரண்டு திரைப்பட பணிகளை முடித்த பிறகு, தன்னுடைய கலை பயணத்திலிருந்து முற்றிலும் விலகி, முழு நேர அரசியல் தலைவராக பயணிக்க உள்ளதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு. அவரை அரசியல் ரீதியாக பின் தொடரும் பலருக்கும் மிகப்பெரிய உத்வேகம் அளித்த ஒரே விஷயம் இதுவென்றால் அது மிகையல்ல. உண்மையில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக அவர் பயணித்து வந்த இந்த நேரத்தில், சினிமாவை விட்டு விலகுவது உண்மையில் மிகப்பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

தனது த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளராக, தனக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த புஷி ஆனந்தை தளபதி விஜய் நியமித்துள்ள நிலையில், இன்று மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா, 3 மதங்களையும் ஒன்றிணைத்து சம்பிரதாயங்களை கடைபிடித்து நடத்தப்பட்டது. ஏற்கனவே இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் தங்களுடைய கட்சியினருக்கு தேவையான அறிவுரைகளை தொடர்ச்சியாக அக்கட்சி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த ஒரு அறிவிப்பு ஒன்றையும் நேற்று அக்கட்சிய தலைவர் தளபதி விஜய் வெளியிட்டு இருந்தார்.

34
Thalapathy Vijay

Thalapathy Vijay

சினிமா உலகில் இருந்து மட்டுமல்லாமல், ஏற்கனவே அரசியல் களத்தில் இருந்தும் பல முக்கிய தலைவர்கள் தளபதி விஜய்க்கு தங்களுடைய வரவேற்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகிய இருவரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்க்கு தங்களுடைய வரவேற்புகளை பெரிய அளவில் தெரிவித்து வருகின்றனர். 

அண்மையில் பெரியாரின் பிறந்தநாளுக்கு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்த விஜயை பாராட்டி "யாருமே அண்ணாவையும் பெரியாரையும் தொடாமல் அரசியலுக்குள் நுழைய முடியாது" என்று கூறி உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல அவர் அரசியல் தலைவராக தமிழ் தமிழக அரசியல் களத்தில் களமிறங்குவதற்கு தன்னுடைய வரவேற்புகளையும் அவர் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அரசியல் தலைவர்களின் பலர் அவரை நல்ல விதமாக பேசி வரும் நிலையில், பாஜக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

44
Tamilisai BJP

Tamilisai BJP

இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் விஜயின் அரசியல் வருகை குறித்தும், இனி அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று அறிவித்திருப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு "தளபதி விஜய் இந்த திரைப்படம் தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என்று சொல்லுவதை, தண்ணீரில் தான் எழுத வேண்டும். அவர் அரசியலுக்கு வந்துவிட்டார் என்பது மகிழ்ச்சிதான். ஆனால் இதுதான் அவருடைய கடைசி படமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இவர்கள் சொல்வதை எல்லாம் நாம் தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும்".

"மாநாட்டை பொருத்தவரை அதை அவர் சிறப்பாக நடத்தி விடுவார், அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. காரணம் சினிமா துணைவினருக்கு எப்பொழுதுமே ஒரு கூட்டம் கூடும், மக்கள் சினிமாவுக்கு வருவது போல அந்த மாநாட்டிற்கும் வந்து விடுவார்கள். ஆனால் அவர் அரசியலில் எப்படி செயல்படுகிறார் என்பது இனிதான் தெரியும்" என்று கூறியிருக்கிறார். 

மயக்கும் மெட்டு போட்ட இளையராஜா.. இரண்டே வரியில் ராமாயணத்தை சொன்ன வாலி - எந்த பாட்டில் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
பிஜேபி
தமிழிசை சௌந்தரராஜன்
தளபதி விஜய்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved