மயக்கும் மெட்டு போட்ட இளையராஜா.. இரண்டே வரியில் ராமாயணத்தை சொன்ன வாலி - எந்த பாட்டில் தெரியுமா?
Lyricist Vaali : 1963 முதல் 2013 வரை சுமார் 50 ஆண்டுகால சினிமா பயணத்தில் 13,000க்கும் அதிகமான பாடல்களை எழுதிய மாமேதை தான் கவிஞர் வாலி.
Vaali
தமிழ் சினிமாவை பொறுத்தவரை 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பாடல் ஆசிரியராக பயணித்த ஒரே மாமேதை வாலி என்றால் அது மிகையல்ல. 1963ம் ஆண்டு தொடங்கிய அவருடைய எழுத்துப் பயணம் கடந்த 2013ம் ஆண்டு வரை தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான திரைப்படங்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி சாதனை படைத்தவர் அவர். அக்காலத்தில் எம்ஜிஆர் தொடங்கி இக்காலத்தில் சிவகார்த்திகேயன் வரை அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் தன்னுடைய பாடல் வரிகளால் பெருமை சேர்த்தவர் வாலி என்றால் அது மிகையல்ல. இவருடைய எழுத்தில் உருவான பல வித்தியாசமான பாடல்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
MGR
பொதுவாக புகழின் உச்சத்திற்கு செல்லும் மனிதர்கள் தங்களை வளர்த்துவிட்ட பிற கலைஞர்களை மறந்து விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் மிகப்பெரிய பாடல் ஆசிரியராக வாலி உருவெடுக்க பெரிதும் துணை நின்றவர் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன். அந்த நன்றியை ஒரு நாளும் வாலி மறந்ததே கிடையாது. காரணம் அவர் பங்கேற்கும் அனைத்து மேடைகளிலும், அவர் மறக்காமல் சொல்லும் ஒரே விஷயம் "இன்று நான் கவிஞனாக இந்த திரை உலகில் பயணிக்கும் இந்த வாழ்க்கை, எம்.எஸ் விஸ்வநாதன் என்கின்ற இசை மேதை எனக்கு இட்ட பிச்சை" என்று பெருமிதத்தோடு கூறுவார். அதே போல தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு அவர் மிகப்பெரிய அளவில் அவர் மதித்த ஒரு நடிகன் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதோ ஒரு புதுமையை புகுத்தும் கலைஞன் கமல் என்று அவரை பாராட்டுவர் வாலி.
Poet vaali
எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் தொடங்கி இன்று அனிருத், ஜிவி பிரகாஷ் வரை அனைத்து இளம் இசையமைப்பாளர்களுடனும் வாலி பயணித்திருக்கிறார். எண்ணற்ற பாடல்களை எழுதிய வாலி, சம்பள விஷயத்தில் மிகவும் கர்ரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் பிரபல இயக்குனர் பாக்யராஜிற்கு பாட்டு எழுத செல்லும் பொழுது, அதிகமாக தன்னை வேலை வாங்குகிறார் பாக்யராஜ் என்று மிகுந்த கோபத்துக்கு உள்ளாகும் வாலி, இனி இந்த பாக்யராஜிடம் பாட்டு எழுதக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருப்பாராம்.
ஆனால் மிகப்பெரிய தொகையோடு அவரை சென்று சந்தித்து தனக்கு பாடல் எழுதிதருமாறு பாக்யராஜ் மீண்டும் கேட்க, உடனே ஒப்புக்கொண்டு அந்த பாடலை திறம்பட எழுதிக் கொடுப்பவர் வாலி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு மிக நேர்த்தியான எழுத்தாளரும், பாடல் ஆசிரியர்களாகவும், பண விஷயத்தில் கரரான ஆளாகும் வலம்வந்தார்.
Lyricist Vaali
இசைஞானி இளையராஜாவோடு பல படங்களில் பயணித்துள்ள வாலி, கடந்த 1991ம் ஆண்டு வெளியான இளையராஜாவின் "கோபுர வாசலிலே" என்கின்ற திரைப்படதிலும் பாடல்களை எழுதினார். கோபுர வாசலிலே படத்தை பொறுத்தவரை பிறைசூடன் மற்றும் வாலி ஆகிய இருவரும் இணைந்து தான் பாடல்களை எழுதினார்கள். அதிலும் குறிப்பாக "தேவதை போல் ஒரு பெண் ஒன்று வந்தது தம்பி" என்ற பாடலில் மனோ, மலேசியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ் என் சுரேந்தர் ஆகிய நான்கு சிறந்த பாடல்களைக் கொண்டு அப்பாடலை அமைத்திருப்பார் இளையராஜா.
33 ஆண்டுகள் கழித்தும் பலருக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும், இந்த பாடலை சிறப்பாக்கியது இளையராஜாவின் இசை ஒருபுறம் என்றால், வாலியின் வரிகள் மறுபுறம் இருக்கும். மேலும் இந்த பாடலில் தான் ஒட்டுமொத்த ராமாயணத்தையே இரு வரிகளில் சுருக்கமாக சொல்லியிருப்பார் வாலி. அதாவது "சீதாவை பிரித்தது மான்தான் புள்ளி மான்தான்.. தோதாக சேர்ந்தது மான்தான் அனுமான்தான்" என்று அவ்வளவு ரத்தின சுருக்கமாக ராமாயணத்தை பற்றி பேசி அசத்தியிருப்பார்.