இது வில்லங்கமான கதையா இருக்கே! லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ஸ்டோரி இதுதானா?

Published : Mar 11, 2025, 08:44 AM IST

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

PREV
14
இது வில்லங்கமான கதையா இருக்கே! லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ஸ்டோரி இதுதானா?

Love Insurance Kompany Movie Story : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சீமான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது.

நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை முதலில் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க இருந்தார் விக்கி. ஆனால் சில காரணங்களால் அப்படம் டிராப் ஆனதை அடுத்து அவருக்கு பதில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்கிறார். 

24
Love Insurance Kompany

பிரதீப் ரங்கநாதன் இதுவரை நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்துள்ளதால் அவர் அடுத்ததாக நடித்து வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அதேபோல் பிரதீப்பின் தந்தை ரோலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Pradeep Love Story: அந்த ஒரு வார்த்தையால் என் காதல் முறிந்தது; கலங்க வைக்கும் பிரதீப் ரங்கநாதனின் லவ் ஸ்டோரி!

34
LIK Movie

மேலும் எஸ்.ஜே.சூர்யா, கெளரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படம் ஒரு மொபைல் செயலியை மையமாக வைத்து உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் கதை என்ன என்பது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

44
LIK movie Story

அதன்படி ஹீரோ பிரதீப்பும் அவரது தந்தையாக நடிக்கும் சீமானும் ஒரே பெண்ணை காதலிப்பது தான் படத்தின் கருவாம். இது ஒரு டைம் டிராவல் பற்றிய படம் என்பதால் தந்தை மகன் இருவரும் டைம் டிராவல் மூலம் காலத்தை கடந்து பயணம் செய்து ஒரே பெண்ணை காதலிப்பார்கள் என்றும், அந்தப் பெண் ஒரு விபச்சாரி என்றும் கூறப்படுகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன இப்படி ஒரு வில்லங்கமான கதையையா விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என கேட்டு வருகின்றனர்.

ஒரு சிலரோ இது என்ன சிந்து சமவெளி பார்ட் 2 மாதிரி கதையா இருக்கும் போல என கிண்டல் செய்து வருகிறார்கள். டிராகன், லவ் டுடே படங்களில் கலக்கிய பிரதீப் இந்த வில்லங்கமான கதையில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இந்த கதையை ஏற்றுக்கொள்வார்களா என்பது படம் ரிலீஸ் ஆனால் தான் தெரியவரும்.

இதையும் படியுங்கள்... பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தால் விக்னேஷ் சிவனுக்கு அடித்த ஜாக்பாட்!

Read more Photos on
click me!

Recommended Stories