பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தால் விக்னேஷ் சிவனுக்கு அடித்த ஜாக்பாட்!
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றும் வரும் டிராகன் திரைப்படத்தால் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

Pradeep Ranganathan, Vignesh Shivan
நடிகை நயன்தாராவின் கணவரும், சினிமா இயக்குனருமான விக்னேஷ் சிவன் போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து நானும் ரெளடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அப்படத்தின் மூலம் முதல் வெற்றியை ருசித்தார். நானும் ரெளடி தான் படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார் விக்கி. அப்படம் தோல்வியை சந்தித்தது. அதன்பின் பாவக் கதைகள் ஆந்தாலஜி தொடரில் ஒரு குறும்படத்தை இயக்கினார்.
Vignesh Shivan Next Movie With Pradeep
பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மூலம் கம்பேக் கொடுத்தார் விக்கி. அப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்குமாரின் ஏகே 62 திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார் விக்னேஷ் சிவன். அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஷூட்டிங் தொடங்க இருந்த சில தினங்களுக்கு முன் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார் விக்கி.
இதையும் படியுங்கள்... அஜித்தை மிஞ்சிய பிரதீப்; பாக்ஸ் ஆபிஸில் விடாமுயற்சியை ஓட ஓட விரட்டிய டிராகன்!
Pradeep Ranganathan
அவருக்கு பதில் மகிழ் திருமேனி இயக்கி அப்படம் விடாமுயற்சி என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் கடும் அப்செட்டில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு கடவுள் போல் வந்து கைகொடுத்தார் பிரதீப் ரங்கநாதன். தற்போது அவரை வைத்து தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இதனிடையே பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த மற்றொரு படமான டிராகன் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.
Nayanthara produced Love Insurance Kompany movie
இந்நிலையில், டிராகன் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் இயக்குனர் விக்னேஷ் சிவனும் செம குஷியில் உள்ளாராம். ஏனெனில் டிராகன் படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ தான். இதனால் அப்படத்திற்கான பிசினஸும் வேற லெவலில் நடக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி அப்படத்தை விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாராவும் ஒரு தயாரிப்பாளராக உள்ளதால், ரிலீசுக்கு முன்பே அப்படத்திற்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் செம குஷியில் உள்ளாராம் விக்கி.
இதையும் படியுங்கள்... 'LIK 'படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த மாஸ் ஹீரோ! பிரதீப் உள்ளே வந்தது எப்படி தெரியுமா?