பிரபலமாகும் 'டிங்க்' வாழ்க்கை முறை.. இளசுகளின் 'புது' ட்ரெண்ட் தெரியுமா? 

By Kalai Selvi  |  First Published Jan 24, 2025, 1:10 PM IST

Dink Lifestyle  : தற்போதைய தம்பதிகளிடம் பிரபலமாகி வரும் டிங்க் வாழ்க்கை முறை குறித்து இந்த பதிவில் காணலாம். 


இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் டிங்க் முறை (DINK) வாழ்க்கையை வாழுகின்றனர். இந்த முறையில் குழந்தைகள் பெற்று கொள்ளாமல், கணவன், மனைவி ஆகியோரின் இரட்டை வருமானத்தை அனுபவிப்பார்கள். குழந்தைகளின் பெற்று கொள்ளும் பொறுப்பை தவிர்த்துவிடுவதால் இன்னும் கூட அவர்கள் சுதந்திரமாக இருக்கமுடியும். 

சமூக வலைதளங்களில் டிங்க் ஜோடி, டிங்க் லைப்ஸ்டைல் போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாழ்க்கை முறையில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று சம்பாதிப்பார்கள். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தவிர்த்து அந்த பொறுப்பைத் தட்டிக் கழித்து இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒரே ஒரு குழந்தையை பெற்றுக் கொள்பவர்கள் கூட இந்த டிங்க் முறையின் கீழ் வர மாட்டார்கள். குழந்தையே பெறாதவர்கள் மட்டுமே இந்த முறையை பின்பற்றுவார்கள். 

Latest Videos

டிங்க் வாழ்க்கை முறை ஒரு பார்வை: 

இந்த முறையில் தம்பதிகளுக்கு அதிகமான சுதந்திரம் கிடைக்கிறது.  பொறுப்புகள் குறைவாக இருக்கிறது. அதனால் இந்த முறையை நவீன தம்பதிகள் விரும்புகின்றனர். இந்த முறையை வாழும் தம்பதிகளை பார்த்து, மற்ற தம்பதியினர் பொறாமைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. சிலர் இந்த முறையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. டிங்க் தம்பதிகள் தங்களுடைய சொந்த விருப்பங்களை சுதந்திரமாக நிறைவேற்றிக் கொள்கின்றனர். அவர்களால் உலக பயணம் மேற்கொள்ளமுடிகிறது. ஆடம்பர செலவுகளுக்கு பணத்தை சேமிக்க முடிகிறது. பெரும்பாலும் இந்த வாழ்க்கை முறையை ஐடி ஜோடிகள் வாழ்க்கை முறை என்கிறார்கள். இவர்கள் தங்களுடைய எதிர்காலத்திற்காக நிறைய பணத்தை முதலீடு செய்ய சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிகிறது. 

இதையும் படிங்க:  ஏன்டா Marriage பண்ணிக்கிட்டோம் புலம்பாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கல்யாணத்தின் 5 நிலைகள்!

டிங்க் மீது ஏன் ஆர்வம் வருகிறது? 

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான வளர்ப்பு முறையில் செலவினங்கள் அதிகமாக உள்ளது.  அதிகமான சம்பளம் பெறும் பணிகளில் இருப்பவர்களுக்கு கூட ஒரு குழந்தையை வளர்ப்பது கடினமாகவே இருக்கிறது.  குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தங்களுடைய வருமானத்தை கிட்டத்தட்ட முழுவதுமாக குழந்தையுடைய மருத்துவச் செலவு, கல்வி, சுகாதாரம் போன்றவர்களுக்கு செலவிட வேண்டியிருக்கிறது. இது அச்சுறுத்தலாக மாறி  வருகிறது. இப்படி பொருளாதாரத்தில் அதிக நெருக்கடி ஏற்படுவது அவர்களுடைய மற்ற செலவுகளை பாதிக்கிறது. தம்பதிகளின் வாழ்க்கை முறை ஒரு குழந்தை பெற்றவுடன் முற்றிலும் மாறிவிடுகிறது. ஆனால் டிங்க் வாழ்க்கை முறையில் இது மாதிரியான பொறுப்புகள் அவர்களுக்கு இருக்காது.  இரட்டை வருமானமும் அதிக சுதந்திரமும் கிடைக்கிறது.

இதையும் படிங்க:  லிவிங் டூகெதர்ல சேர்ந்து வாழப் போறீங்களா? 3 முக்கியமான சட்டங்களைத் தெரிஞ்சுக்கோங்க!

 பொருளாதார சுதந்திரம்: 

ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பொறுத்து செலவுகள் மாறுபடும். குடும்ப உறுப்பினர்கள் குறைவாக இருக்கும்பட்சத்தில் அதிகமான பொருளாதார சுதந்திரம் இருக்கும். கணவன், மனைவி இருவரும் ஒரு குழந்தையை வளர்க்கும்போது அக்குழந்தையின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை இன்பமாக மாற்ற தங்கள் செலவுகளைக் குறைக்கிறார்கள். ஆனால் டிங்க் தம்பதிகள் தாங்கள் சம்பாதிப்பதை தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும்,  பொழுதுபோக்கு அனுபவத்திற்கும் பயன்படுத்த ஆர்வம் காட்டுகிறார்கள்.  

பொறுப்பு: 

ஒரு குழந்தையை பெறுவது என்பது தம்பதிகளின் வாழ்க்கையில் அடுத்து எடுக்கப் போகும் எல்லா முடிவுகளிலும் பொறுப்பெடுத்துக்கொள்ள வழி வகுக்கிறது. இந்த பொறுப்பை டிங்க் தம்பதிகள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. குழந்தை அவர்களுக்கு ஒரு தடையாக இருப்பதாக கருதுகிறார்கள். அதனால் தங்களுடைய வேலையில் அல்லது சொந்த தொழிலில் கவனம் செலுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்புகின்றனர். 

 பெண்களுக்கு சுதந்திரம்: 

ஒரு குழந்தை பிறந்த பிறகு பெண்களின் வாழ்க்கை அடியோடு மாறி விடுகிறது. அவர்கள் தங்களுடைய இலக்கை நோக்கி பயணிப்பதில் சற்று பின்தங்கி விடுகிறார்கள்.  குழந்தை பிறந்து குழந்தை வளரும் வரை ஒரு இடைவெளியை பெண்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. டிங்க் வாழ்க்கை முறையில் ஆண்கள் சம பொறுப்பை பெண்களிடம் பகிர்ந்து கொள்வதால் இருவரும் தங்கள் தொழில், இலக்கு, தனிப்பட்ட விருப்பங்களில் கனவுகளில் கவனம் செலுத்த முடிகிறது. 

அனுபவ பகிர்வு: 

டிங்க் தம்பதிகள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு நேரத்தை ஒதுக்கி கொள்கிறார்கள். ஆனால் குழந்தைப் பெற்ற தம்பதிகளிடம் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினால் வாழ்க்கை மாறிவிட்டது என்று சொல்லக்கூடும். ஒரு குழந்தை பிறந்த பிறகு பொருளாதார அளவிலும் சரி தனிப்பட்ட விருப்பங்களுக்கு கவனம் செலுத்துவதும் சரி பெரிய மாற்றம் நிகழ்கிறது. டிங்க் வாழ்க்கை முறையை பின்பற்றும் தற்கால தம்பதிகள் இந்த விஷயங்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தங்கள் வாழ்க்கையில் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற  கவனம் செலுத்துகிறார்கள்.  பிறரின் அனுபவத்தைக் கண்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்கிறார்கள்.

click me!