Weight Loss Tips : உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியம் சில விஷயங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
உடல் பருமன் என்பது ஒரு நபரை கவலையடையச் செய்யும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இன்று மாறிவிட்டது. உடல் பருமன் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல கடுமையான உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று பல ஆய்வுகள் கூறுகின்றனர். உங்களுக்கு ஜிம்மிற்கு செல்ல நேரமில்லை என்றாலோ அல்லது விலையுயர்ந்த உங்களை சாப்பிட பணம் இல்லை என்றாலோ உங்களது வாழ்க்கை முறையில் சில பழக்கவழக்கங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் இது உங்கள் முழு உடல் எடையையும் படிப்படியாக குறைக்க பெரிதும் உதவும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்காக நீங்கள் கூடுதலாக எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவை தினமும் நீங்கள் மிக எளிதாக செய்யக்கூடிய பணிகளில் ஒன்றாகும். உடல் எடையை குறைக்க உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத இத்தகைய பழக்கங்களை கடைப்பிடிப்பது ரொம்பவே நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இந்த பழக்கங்களை நீங்கள் விடாமுயற்சியுடன் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையை குறைக்கலாம். எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. அதிகாலை எழு:
உடல் எடையை குறைக்க மிக முக்கியமான பழக்கங்களில் ஒன்று அதிகாலை எழுவது. கலையில் எழுவது நீங்கள் உங்களது ஆரோக்கியத்திற்கு செய்யக்கூடிய சிறந்த பங்களிப்பாகும். அதிகாலையில் எழுவது உங்களது உடலை அன்றைய நாளுக்கு சிறப்பாக தயார்படுத்த முடியும். முக்கியமாக உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட இது ஒரு நல்ல பழக்கமாகும்.
2. சூடான நீர் குடியுங்கள்:
அதிகாலை எழுந்தவுடன் பல் துலைக்கி, காலை கடனை முடித்துவிட்டு வெறும் வயிற்றில் சூடான நீர் குடிப்பது மிகவும் அவசியம். நீரேற்றுத்துடன் உங்களது நாளை தொடங்குங்கினால், உங்களது உடலில் மெட்டாபாலிசம் மேம்படும் மற்றும் காலை பசியை தவிர்க்க உதவும். முக்கியமாக உடலில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற இது உதவுகிறது.
3. சூரியனின் நில்!
உடல் எடையை குறைப்பதற்கு வைட்டமின்றி மிகவும் அவசியம். சூரியன் மூலம் வைட்டமின் டி யை அதிகம் பெற முடியும். இதற்கு காலை எழுந்ததும் சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்றால் எடையை குறைக்கலாம். ஆய்வு ஒன்றில், காலை சூரிய ஒளியில் நிற்பது எடையை குறைக்க உதவுகிறது என்று கண்டறிந்துள்ளனர். இன்னும் சில ஆய்வுகளோ வைட்டமின் டி தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் எடையை சுலபமாக குறைத்து விடலாம் மற்றும் எடை அதிகரிப்பதை தடுக்கவும் இது உதவுகிறது.
4. அதிக புரதம் நிறைந்த காலை உணவை சாப்பிடுங்கள்:
காலை உணவு ரொம்பவே முக்கியமானது. ஏனெனில் இது முழு நாள் வேலைக்கான ஆற்றலை வழங்கும். புரதம் நிறைந்த உணவுகள் மதிய உணவு சாப்பிடும் வரை உங்களை முழுதாக உணர வைக்கும் மேலும் அதிக பொருத்தம் நிறைந்த உணவே காலை உணவாக சாப்பிட்டால் பசியை தடுக்கும் மற்றும் எடையை குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி சொல்லுகின்றது.
இதையும் படிங்க: ராகியை 'இப்படி' சாப்பிட்டால் விறுவிறுனு எடையை குறைக்கலாம்.. செம்ம ரெசிபி
இதையும் படிங்க: தொங்கும் தொப்பை கரைய, எடை வேகமாக குறைய.. தினமும் காலை இதுல '1' சாப்பிடுங்க!
5. உடற்பயிற்சி:
உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அதிகாலையில் எழுந்தவுடன் யோகா, நீட்சி, நடைபயிற்சி, வலிமை பயிற்சி போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். ஏனெனில் அவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
6. உணவு திட்டம்:
எடையை குறைக்க உணவு திட்டத்தை உருவாக்குங்கள். அதாவது காலையில் சாப்பிடும் உணவு, அதன் பிறகு சாப்பிடும் தின்பண்டங்கள் போன்றவற்றிற்கான சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். முன்கூட்டியே இப்படி முடிவு எடுத்தால் ஆரோக்கியமற்ற உணவு முறை, அதிகப்படியான உணவை தவிர்ப்பது மற்றும் சீரான உணவை பராமரிக்க இது உதவும்.
7. ஆரோக்கியமான தின்பண்டங்கள் சாப்பிடுங்கள்:
மதிய உணவுக்கு முன் ஆரோக்கியமான தின்பண்டங்கள் சாப்பிடுங்கள். இதற்கு நீங்கள் நட்ஸ்கள், விதைகள், பழங்கள் ஆகியவற்றை சிறிய அளவில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இவை அதிக கலோரிகளை சாப்பிடுவதை தவிர்க்கிறது மற்றும் நீண்ட நேரம் உங்களை முழுமையாக உணர வைக்கிறது. இதனால் எடையை குறைப்பதற்கான இலக்கை அடைய முடியும்.
8. சர்க்கரை பானங்களை குடிக்காதே!
காலையில் சர்க்கரை கலோரிகள் உள்ள பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக க்ரீன் டீ, மூலிகை டீ போன்ற ஆரோக்கியமான பானங்களை குடியுங்கள். இது ஆரோக்கியமானது மட்டுமின்றி, அதிக கலோரி சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவும்.
9. திரை நிறத்தை குறையுங்கள்!
எடை இழப்புக்கு திரை நிறத்தை குறைப்பது மிகவும் அவசியம். பொதுவாக நாம் உணவு சாப்பிடும் போது டிவி, மொபைல் போன் பார்ப்பதை வழக்கமாக்கியுள்ளோம். ஆனால் இது தவறு. இதனால் நீங்கள் அதிகப்படியான உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் எடை அதிகரிக்க தான் செய்யும்.
10. போதுமான அளவு தூக்கம்:
தூக்கமின்மை அதிகரித்த பசியுடன் இணைக்கப்படலாம் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது அதிக கார்போ ஹைட்ரேட் மற்றும் அதிக கலோரி உணவுகளை உண்ணும் இயக்கத்தை உங்களுக்கு அதிகரிக்க செய்யும். எனவே உடல் எடையை குறைப்பதற்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியம்.