MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தொங்கும் தொப்பை கரைய, எடை வேகமாக குறைய.. தினமும் காலை இதுல '1' சாப்பிடுங்க!

தொங்கும் தொப்பை கரைய, எடை வேகமாக குறைய.. தினமும் காலை இதுல '1' சாப்பிடுங்க!

Healthy Breakfast for Weight Loss : ஜிம் போகாமலேயே உங்களது தொங்கும் தொப்பையையும், எடையையும் குறைக்க உதவும் சில காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 17 2025, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Healthy Breakfast for Weight Loss in Tamil

Healthy Breakfast for Weight Loss in Tamil

இன்றைய காலகட்டத்தில் பலரும் தொங்கும் தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறார்கள். இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் தான். உடல் எடை அதிகரிப்பால் தன்னம்பிக்கை குறைவது மட்டுமின்றி, உடலில் பலவித நோய்களையும் ஏற்படுத்தும். இது தவிர, தொங்கும் தொப்பையை குறைப்பது மிகவும் கடினம். எனவே, தொப்பை மற்றும் எடையை குறைக்க பலர் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதாவது தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வது கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவது என சில எளிய வழிகளில் உடல் எடையை குறைக்கிறார்கள். இன்னும் சிலரோ ஜிம்மிற்கு சென்று எடையை குறைக்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Healthy Breakfast for Weight Loss in Tamil

Healthy Breakfast for Weight Loss in Tamil

இத்தகைய சூழ்நிலையில் உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவு மிகவும் அவசியம். நாளின் ஆரம்பம் ரொம்பவே முக்கியமானது என்பதால், ஆரோக்கியமான உணவுடன் நாளை தொடங்குவது ரொம்பவே நல்லது. எனவே புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை காலையில் சாப்பிடுங்கள். இவை நாள் முழுவதும் நம்மை ஆற்றலுடன் வைப்பது மட்டுமின்றி, தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும், வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும், செரிமான அமைப்பு மேம்படும் மற்றும் பகல் நேரத்தில் கலோரிகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தும். இப்போது தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

35
Healthy Breakfast for Weight Loss in Tamil

Healthy Breakfast for Weight Loss in Tamil

பழங்கள்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை நேரத்தில் பழங்களை சாப்பிடுவது ரொம்பவே நல்லது. ஏனெனில் இவை உடலில் கலோரிகள் அளவை அதிகரிக்கச் செய்யாது. ஆனால், நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வாரி வழங்கும். எனவே ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுங்கள். அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாகவே உள்ளன. எனவே காலை உணவாக இதை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும், எடையும் வேகமாக குறையும்.

முளைகட்டிய பயிர்கள்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முளைகட்டிய பயிர் வகைகளை காலை உணவாக எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. ஆனால் இதனுடன்வெங்காயம், தக்காளி மற்றும் பிற மாசலா பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இதனால் வயிறு நிரம்பி இருக்கும். எடையும் அதிகரிக்காது.

45
Healthy Breakfast for Weight Loss in Tamil

Healthy Breakfast for Weight Loss in Tamil

முட்டை:

பலரும் காலை உணவாக அதிகம் விரும்பி சாப்பிடுவது முட்டைதான். பல விதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய தசைகளை உருவாக்கும். காலை உணவாக முட்டை சாப்பிட்டு வந்தால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் மற்றும் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை நமக்கு வழங்கும்.

ஓட்ஸ்:

எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு காலை உணவில் ஓட்ஸ் சிறந்த தேர்வாகும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே காலை உணவாக இதை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வு ஏற்படும். இதனால் வயிற்றுக் கொழுப்பு மற்றும் இடையே சுலபமாக குறைத்து விடலாம்.

55
Healthy Breakfast for Weight Loss in Tamil

Healthy Breakfast for Weight Loss in Tamil

நட்ஸ்கள்:

பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ்களை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பூசணி விதை, சியா விதை, ஆளி விதை போன்ற விதைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். நட்ஸ்கள் மற்றும் விதைகளில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் இவற்றை காலை வேலையில் சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வு ஏற்படும். இதனால் தேவையற்ற பசி தடுக்கப்படும். இதன் காரணமாக தொப்பைக் கொழுப்பு மற்றும் எடையை குறையலாம்.

தயிர்:

இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. காலை உணவில் தயிர் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இது எடையை குறைப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. ஏனெனில் தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும் மற்றும் எடையையும் வேகமாக குறைக்க உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Milk in Pressure Cooker: சாதம், பருப்பு வைக்கும் குக்கரில் பால் காய்ச்சலாமா? பலரும் அறியாத உண்மை!
Recommended image2
Generational Curse: உங்கள் முன்னோர் செய்த துரோகம் உங்களை துரத்துதா? பரம்பரை சாபத்தை உடைப்பது எப்படி?
Recommended image3
முதலில் தாளிப்பு.. அடுத்து காய்கறி.. ஒரே குக்கரில் இப்படிச் செஞ்சா சாம்பார் சாதம் சுவை வேற லெவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved