Vishnu Vishal Salary: 'லால் சலாம்' வெற்றியால் சம்பளத்தை மளமளவென உயர்த்திய விஷ்ணு விஷால்! முழு விவரம் இதோ!

First Published Feb 16, 2024, 3:01 PM IST

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், கடந்த வாரம் வெளியான 'லால் சலாம்' கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் சம்பளத்தை உயர்த்திய தகவல் வெளியாகியுள்ளது.
 

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், கடந்த 2009-ஆம் ஆண்டு கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு' இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்த விஷ்ணு விஷ்ணு விஷாலுக்கு... தொடர்ந்து ஏறுமுகமாகவே அமைந்தது.

Lal Salaam

இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான நீர் பறவை, முண்டாசு பட்டி, நேற்று இன்று நாளை, போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தது. குறிப்பாக விஷ்ணு விஷால் நடித்த ராட்சஷன் திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்தது. ஒரு நடிகராக திரையுலகில், நிலைநிறுத்தி கொண்ட பின்னர், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். இவர் தயாரிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், FIR, கட்டா குஸ்தி போன்ற படங்களும் இவருக்கு வர்த்தக ரீதியிலான வெற்றியை கொடுத்தது.

Abishek Raja: பிக்பாஸ் அபிஷேக் ராஜா இயக்குனராக அவதாரம் எடுக்கும் 'ஜாம் ஜாம்'! போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!

இந்நிலையில், விஷ்ணு விஷால் பெண் இயக்குனர் விஷ்ணு விஷால் இயக்கத்தில் நடித்துள்ள நடித்து வெளியான திரைப்படம், 'லால் சலாம்'. கிரிக்கெட் விளையாட்டை வைத்து நடிக்கும் அரசியல் தான் இந்த படம். முழுக்க முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளால் நிரம்பி வழியும் இந்த படம், ஒரு தரப்பினருக்கு பிடித்திருந்தாலும்... ஜாலியாக படம் பார்க்க வரும் பலருக்கு சற்று வெறுப்பு தட்டவைத்த படமாகவே அமைந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் தூள் கிளப்பிய இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஷ்ணு விஷால் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த, விஷ்ணு விஷால்... மளமளவென தன்னுடைய சம்பளத்தை, 8 கோடி வரை உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. 
திருமணத்திற்கு பின்பும் குறையாத காதல்.. காதலர் தினத்தை ரொமான்டிக்கால் குதூகலாமாக்கிய சித்து - ஸ்ரேயா! போட்டோஸ்

click me!