Coimbatore : கோவை தொழிலதிபரிடம் 300 கோடி மோசடி.. 2 பெண்கள் உள்பட ஐவர் கைது - போலீசார் தீவிர விசாரணை!

Coimbatore : கோவை தொழிலதிபரிடம் 300 கோடி மோசடி.. 2 பெண்கள் உள்பட ஐவர் கைது - போலீசார் தீவிர விசாரணை!

Ansgar R |  
Published : May 08, 2024, 12:03 AM IST

Coimbatore : கோவையில் தொழிலதிபரிடம் 300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பல கோடி மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார்.தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும் 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.

மோசடி செய்ததை அறிந்த சிவராஜ், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் மோசடியில் ஈடுபட்ட வசந்த், சிவகுமார், ஷீலா, தீக்ஷா மற்றும் சக்தி சுந்தர் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி பணம்,140 பவுன் நகை,100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார்  நீதிமன்றத்தில் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்து மீண்டும் குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

06:41நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி
06:37கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு
02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
Read more