வெறும் 5 நிமிடத்தில் தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்ய சூப்பரான ஐடியாக்கள் இதோ!

First Published May 9, 2024, 3:15 PM IST

தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்வது பெண்களுக்கு பெரும் சவாலானது என்றே சொல்லலாம். ஆனால் சில எளிய குறிப்புகள் மூலம் பாட்டில்களை வெறும் 5 நிமிடங்களில் சுத்தம் செய்யலாம். அது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளலாம் வாங்க..
 

தற்போது கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. பலர் தங்களது வீடுகளில் பாட்டிலில் தண்ணீர் அடுத்து ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். கோடையில் இது மிகவும் பொதுவானது. கொளுத்தும் வெயிலில் அனைவரும் குளிர்ந்த நீரை தான் குடிக்க விரும்புவார்கள். ஆனால், பாட்டிலை கழுவாமல் பயன்படுத்தினால் நாளடைவில் அதிலிருந்து நாற்றம் அடிக்க ஆரம்பிக்கும். இதுபோன்ற பாட்டில்களைப் பயன்படுத்தினால் 
பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
 

பலர் அழுக்கு படிந்த தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்வதில் அதிக நேரம் எடுக்கிறார்கள் மற்றும் பாட்டில் முற்றிலும் சுத்தமாக கழுவுவதில்லை. ஆனால் சில எளிய குறிப்புகள் மூலம் தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்யலாம். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

பிளாஸ்டிக் பாட்டிலை சுத்தம் செய்வது எப்படி?: இதற்கு நீங்கள் தண்ணீர் மற்றும் கல் உப்பு எடுக்க வேண்டும். இப்போது நீங்கள் பாட்டிலில் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக குலுக்க வேண்டும். நீங்கள் எந்த அளவிற்கு பாட்டிலை நன்கு குலுக்குகிறீர்களோ அந்த அளவுக்கு பாட்டில் சுத்தமாகும்.

மவுத் ப்ரெஷ்னர்: மவுத் ப்ரெஷ்னர் வாயை மட்டுமல்ல, பாட்டில்களையும் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பாட்டிலுக்குள் சிறிது தண்ணீர் மற்றும் வாய் ப்ரெஷ்னரை கலந்து பாட்டிலை நன்றாக குலுக்க வேண்டும். 

பச்சரிசி, சமையல் சோடா மற்றும் வெள்ளை வினிகர்: பச்சரிசி, 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டீஸ்பூன் வெள்ளை வினிகர் ஆகியவற்றை பாட்டில் போட்டு மூடி, நன்றாக குலுக்க வேண்டும். பின்னர் அவற்றை அகற்றி சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவுங்கள். பிறகு பாட்டிலை சிறிது நேரம் திறந்து வைத்தால் வினிகர் வாசனை வராது.

சூடான நீர்: வெதுவெதுப்பான நீரில் சிறிது திரவ சோப்பை கலந்து அதை பாட்டிலில் போட்டு நன்றாக குலுக்க வேண்டும். விரும்பினால், சிறிது அரிசியையும் சேர்க்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம், பாட்டிலில் படிந்துள்ள அழுக்கு மற்றும் கறைகள் நீங்கும். கடைசியாக ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் பண்ணவும்.

click me!