தீர்த்தம் கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்..

By Raghupati R  |  First Published May 15, 2024, 11:52 PM IST

தீர்த்தம் கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை மாவட்டம்: சென்னையில் கோயிலுக்கு வந்த பெண்ணை ஏமாற்றிய வழக்கில் காளிகாம்பாள் கோவில் அர்ச்சகரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெளியூரில் இருந்து சென்னைக்கு சினிமா ஆசையில் வந்துள்ளார். சரியான வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் கோவிலுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். பிறகு ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்துள்ளார்.

பிறகு அவ்வப்போது படங்களில் படங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த பெண்ணை அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

அந்த புகாரில், கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை வீட்டில் காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

பூமியைத் தாக்கும் சூரியப் புயல்.. இணையம், மொபைல் நெட்வொர்க் பாதிக்கும்.. எலான் மஸ்க் கொடுத்த அலெர்ட்..

click me!