
விமான நிலையம் - சென்னை சென்ட்ரல் இடையே நீல வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை ஒருநாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக எந்த போக்குவரத்து இடையூறும் இல்லாமல் மிக விரைவாக தாங்கள் செல்லும் இடத்திற்கு பயணிகள் சென்று வருவதால் மெட்ரோ ரயில் சேவைக்கு நாளுக்கு நாள் பயணிகளின் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Special Buses: வீக் எண்டில் சொந்த ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்.. குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!
இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே மெட்ரோ ரயில் பயணிகள் விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பச்சை வழித்தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விம்கோ நகர் - விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு.. நடந்தது என்ன?