சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட்டை பயன்படுத்தும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
சென்னையில் விரைவில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணிக்க ஒரே டிக்கெட்டை பயன்படுத்தும் வகையில், பிரத்யேக ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கார்டை ரீசார்ஜ் செய்து எந்த வழியிலும் எளிதாகப் பயணிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னையில் பொதுமக்கள் போக்குவரத்துத் தேவைக்காக பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து விதமான பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பயணிக்கும் மக்கள் தனித்தனி பயணச்சீட்டு வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இயக்கப்படும் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக தனியாக மொபைல் அப்ளிகேஷன் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் இதற்கு டெண்டர் கோரியிருந்தது.
UPI மூலம் பணம் பறிக்கும் சைபர் கிரிமினல்ஸ்! பேமெண்ட் செய்யும்போது ஒரு செகண்ட் இதை செக் பண்ணுங்க!
இந்நிலையில் வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த ஒரே டிக்கெட் திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்று விதமான போக்குவரத்திலும் பயணிக்க முடியும்.
இந்த முறையில் டிக்கெட் எடுப்பதற்கு பிரத்யேக கார்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எந்த போக்குவரத்தை பயன்படுத்தினாலும் இந்த கார்டை ரீசார்ஜ் செய்து, அதன் மூலம் டிக்கெட் எடுக்கலாம்.
இத்திட்டம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி? நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?