தொகுப்பாளினிக்கு தீர்த்தம் கொடுத்து பாலியல் லீலை... கர்ப்பமாக்கி கழட்டி விட பார்த்த பூசாரி.. பரபரப்பு புகார்!

Published : May 16, 2024, 12:16 AM IST
தொகுப்பாளினிக்கு தீர்த்தம் கொடுத்து பாலியல் லீலை... கர்ப்பமாக்கி கழட்டி விட பார்த்த பூசாரி.. பரபரப்பு புகார்!

சுருக்கம்

டிவி தொகுப்பாளனி ஒருவர், சாமியார் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது பரபரப்பு புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் தொகுப்பாளினி ஒருவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதாகும் இந்த பெண் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். துணை நடிகையாகவும் சில படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இவருக்கு சமீபத்தில் பூசாரி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின் அடிப்படையில் அடிக்கடி இருவரும் வாட்ஸ் அப் மூலம் சேட் செய்வது, மற்றும் அடிக்கடி போனிலும் பேசியுள்ளார். நடிகையை மயக்கும் விதத்தில், ஒரு சில பொருட்களை வாங்கி கொடுத்து அவரை நம்ப வைத்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தொகுப்பாளினி தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்த இவர், அம்மன் தீர்த்தம் என தண்ணீர் ஒன்றை கொடுக்க, அதை குடித்ததும் அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார்.

இதை பயன்படுத்திக்கொண்ட அந்த பூசாரி, படுக்கை அறைக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னுடைய வேலை முடிந்ததும், நடிகையை அப்படியே விட்டு விட்டு அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். தொகுப்பாளினி மயக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது, ஆடை இன்றி கிடந்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த, அவர்... அந்த பூசாரிக்கு போன் செய்து கேட்டபோது, அவர் உன் அழகில் மயங்கி அப்படி செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இதை பற்றி நீ கவலை பட வேண்டாம். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என அவர் கூறியதை தொடர்ந்து, அந்த தொகுப்பாளினியும் அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். 

அந்த தொகுப்பாளினி கர்ப்பமாக ஆன பின்னர், அவரை பூசாரி கார்த்திக் கழட்டிவிட முயன்ற நிலையில்... இதுகுறித்து போலீசாரிடம் அந்த பெண் தற்போது புகார் கொடுத்துள்ளார். மேலும் பல பெண்களிடம் இப்படி ஆசை வார்த்தை கூறி, அந்த பூசாரி நெருங்கி பழகி, அவர்களின் ஆபாச புகைப்படங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Premji Amaran Songs: என்ன கொடுமை சார் இது?" - பிரேம்ஜி பாடிய டாப் ஹிட் பாடல்களின் ஆச்சரியப் பட்டியல்!
T. Rajendar Thanks: "பசிக்கு சோறு போட்டவனை மறக்கமாட்டேன்!" - மேடையிலேயே கர்ஜித்த டி.ஆர்! பின்னணியில் இருந்த அந்த மாஸ் நடிகர் யார் தெரியுமா?!