250 கோடி இல்ல... அதுக்கும் மேல; கூலி படத்துக்காக ரஜினிக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - அதுவும் இத்தனை கோடியா?

First Published Apr 24, 2024, 1:51 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்துக்காக சூப்பர்ஸ்டாருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். இதில் ரஜினி மற்றும் விஜய் இடையே தான் சம்பள விஷயத்தில் கடும் போட்டி நிலவி வந்தது. ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்காக ஷேர் தொகை உள்பட மொத்தம் ரூ.200 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், நடிகர் விஜய்க்கு கோட் படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட்டது,

விஜய்யை விட ரஜினிக்கு அதிக சம்பளம்

அதுமட்டுமின்றி விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. இதன்மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடம் பிடித்திருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது அந்த இடத்தை தட்டிப்பறிக்க நடிகர் ரஜினிகாந்த் வந்திருக்கிறார். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள கூலி படத்துக்காக அவருக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... Rachitha Birthday : ஒயின் குடித்தபடி பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் ரச்சிதா... வைரலாகும் பர்த்டே போட்டோஸ்

கூலி படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம்

அதன்படி கூலி படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு ரூ.260 முதல் 280 கோடி சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ரஜினிகாந்த் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் கூலி பட ஷூட்டிங்

கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கிரீஷ் கங்காதரன் மேற்கொள்ள உள்ளார். மேலும் படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜ் பணியாற்ற இருக்கிறார். வருகிற ஜூன் மாதம் முதல் கூலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி கைவசம் இதுதவிர வேட்டையன் படமும் உள்ளது. அப்படம் வருகிற அக்டோபரில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  இயக்குனர் சேரன் மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

click me!