MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இயக்குனர் சேரன் மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

இயக்குனர் சேரன் மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

இயக்குனர் சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு நேற்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 24 2024, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Director Cheran

Director Cheran

மதுரையில் பிறந்த இயக்குனர் சேரன், திரைப்படங்கள் இயக்கம் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து வாய்ப்பு தேட துவங்கினார். ஆரம்பத்தில் சில படங்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய இவர், இதை தொடர்ந்து, இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான புரியாத புதிர் திரைப்படத்தில் முதன் முதலாக உதவி இயக்குனராக பணியாற்றினார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 1997-ஆம் ஆண்டு பார்த்திபன் மற்றும் மீனா நடிப்பில் வெளியான 'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சாதி ரீதியிலான சர்ச்சையில் சிக்கினாலும் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பொற்காலம் (1999), வெற்றிக் கொடி கட்டு (2000), பாண்டவர் பூமி (2001) போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே திரைப்படம் இயக்கினார். 


 

36
Director Cheran

Director Cheran

குறிப்பாக இவர் இயக்கி நடித்த, ஆட்டோகிராப் திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. ஒரு இயக்குனராக வெற்றி கண்டபின்னர் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து கொண்டார்.
 

46
Director Cheran

Director Cheran

கடைசியாக தம்பி ராமையா மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து, 'திருமணம்' என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சேரன், விஜய் சேதுபதி கூறியதால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
 

56

இயக்குனர் சேரனின் மூத்த மகளான நிவேதா பிரியதர்ஷினிக்கும் - சுரேஷ் ஆதித்யா என்கிற தொழிலதிபருக்கு நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள், இவருடைய துணை இயக்குனர்கள், முன்னணி இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

66

மகளின் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இயக்குனர் சேரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போட்டுள்ள பதிவில், "நேற்று நடந்த என் மகளின் திருமணத்தில் எனது பலமாய் நின்று காலையில் இருந்து மாலை வரை அனைத்து வேலைகளையும் சந்தோசமாய் பார்த்து வருகை தந்த அனைவரையும் மகிழ்வாய் அனுப்பிவைத்த என்னுடன் பணிபுரிந்த என் தம்பிகள் ( இயக்குனர் ஆனவர்களும் வருங்கால இயக்குனர்களும்) அனைவருக்கும் நன்றி.. என கூறி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved