முட்டை சாப்பிட்ட உடன் எக்காரணம் கொண்டும் 'இதை' சாப்பிடாதீங்க..! மீறினால் ஆபத்து..!!

First Published Mar 19, 2024, 4:00 PM IST

 தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான். ஆனால், முட்டை சாப்பிட்ட உடனேயே சில வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவை..
 

முட்டை எவ்வளவு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்ல தேவையில்லை. ஏனெனில் அது பற்றி நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரியும். தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில், இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. 

அதனால்தான் காலை உணவில் முட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் முட்டையின் ஆரோக்கிய நன்மைகளுடன் தீமைகளும் உள்ளதுப் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்.. முட்டை சாப்பிட்ட உடனேயே சில வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே,முட்டையை சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? அவற்றால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்..

எந்தச் சூழ்நிலையிலும் முட்டை சாப்பிட்ட உடனே எலுமிச்சை ஜூஸ் குடிக்க கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அப்படி சாப்பிட்டால் இதயம் தொடர்பான நோய்கள் வரும் என எச்சரிக்கின்றனர்.

மேலும், வாழைப்பழத்தை எந்த சூழ்நிலையிலும் முட்டை சாப்பிட்ட உடனேயே சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். இவ்வாறு செய்வதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, இது வாந்திக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  கெட்டுப்போன முட்டையை சுலபமான முறையில் கண்டறியும் வழிகள் இதோ..!!

முட்டை சாப்பிட்ட பிறகு பால் அல்லது பால் பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நீங்கள் பச்சை முட்டை விரும்பி சாப்பிடுபவரா? அவ்வாறு சாப்பிடுவது நல்லதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்...

அதுபோலவே, முட்டை சாப்பிட்ட உடனேயே சீஸ் எடுக்கக் கூடாது என்கின்றனர் நிபுணர்கள். முக்கியமாக, அவித்த முட்டையை சாப்பிட்ட உடனேயே சீஸ் சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!