Savukku : பிளாஸ்டிக் பைப்பால் அடித்திருக்காங்க; கை எலும்பு முறிந்திருச்சு; கதறும் சவுக்கு சங்கர் வழக்கறிஞர்!!

By Ajmal Khan  |  First Published May 7, 2024, 6:22 AM IST

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், 10க்கும் மேற்பட்ட போலீசார் பிளாஸ்டிக் பைப்பால் அடித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.
 


சவுக்கு சங்கர் கைது

காவல்துறையில் பணியாற்றிய போது தொலைபேசி ஆடியோ விவகாரத்தை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அரசு பணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதன் காரணமாக அரசியல் விமர்சிகர் என்ற பெயரில் யுடியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்தார். இந்தநிலையில் தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். காவல்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்களை ஒருமையில் விமர்சனம் செய்து வந்தார். இதனால் சவுக்கு சங்கருக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

கட்டி வைத்து அடித்த போலீசார்

இதனையடுத்து தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கடந்த சனிக்கிழமை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சவுக்கு சங்கரை அவரது வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து கண்களைக் கட்டி 10க்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப் களை துணியால் கட்டி அடித்துள்ளதாக தெரிவித்தார். அதில் சவுக்கு சங்கருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறினார். மேலும் எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு இதுவரை எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த ஒரு சோதனைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

சவுக்கு சங்கரை சிறையில் கொடுமைப்படுத்தி கையை சிறை காவலர்கள் முறித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ள நிலையில், தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து வரும் வழியில் சவுக்கு சங்கருக்கு மரண பயத்தை காண்பிக்க வேண்டும் (1) pic.twitter.com/KboyRDA9P1

— Anbalagan (@anbu)

 மருத்துவ சிகிச்சை தேவை

சவுக்கு சங்கரின் விருப்பத்திற்கு மாறாக வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள கூறுவதாகவும் தெரிவித்தார். எனவே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி அளிக்க வேண்டும், அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். சவுக்கு சங்கர் சிறையில் மெண்டல் பிளாக் என்று சொல்லக்கூடிய இடத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். எனவே இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை தாங்கள் நாட இருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். 

அடுத்தக்கட்ட தேர்தலுக்காக மோடி இஸ்லாமியர்கள் குறித்து இன்னும் மோசமாக பேசுவார் - திருநாவுக்கரசர்

click me!