Aarani : ஆரணி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு போதை ஊசி போட்டதாக வாலிபரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர் கிராம மக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி நித்தியானந்தம் என்பவரின் மகன் ராகுல் (15) தற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கோடை விடுமுறை நாளான இன்று, ராகுல் விளை நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் ராகுலுக்கு போதை ஊசி காட்டி இதனைப் போட்டுக்கொள் நன்றாக இருக்கும் என்று வற்புறுத்தி உள்ளனர்.
ராகுல் ஊசி போட மறுத்த நிலையில் அவரை வற்புறுத்தி வலுக்கட்டாயமாக இரண்டு இளைஞர்கள் போதை ஊசி போட முயற்சி செய்துள்ளனர். உடனே சிறுவன் ராகுல் கூச்சலிட்ட, நிலையில் அக்கம் பக்கத்தினர் ராகுலை மீட்டு அந்த இளைஞர்களை துரத்திச் சென்றுள்ளனர். அப்பொழுது ஒரு இளைஞர் தப்பிச் சென்று விட்டார்.
undefined
கன்னியாகுமரி கடற்கரையில் விளையாடிய 5 பயிற்சி மருத்துவர்கள் பலி; அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் ஆவேசம்
மற்றொரு இளைஞரை பொதுமக்கள் பிடித்து ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள மின்கம்பியில் கட்டி வைத்து ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு தர்ம அடி கொடுத்தனர். அப்பொழுது விரைந்து வந்த கிராமிய காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை விசாரிக்கும் பொழுது அவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் காஞ்சிபுரத்திலிருந்து ஆரணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆரணி அருகே இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தர்ம அடி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Child Death: வேலூரில் வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி; தன்னிச்சையாக நடை பழகியபோது நிகழ்ந்த சோகம்