வீட்டுல பாஸ்தா இருந்தா குழந்தைகளுக்கு டிபனாக இப்படி செஞ்சி கொடுங்க..விரும்பி சாப்பிடுவாங்க..!

By Kalai Selvi  |  First Published May 7, 2024, 7:30 AM IST

இந்த பதிவில், ஒயிட் சாஸ் பாஸ்தா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


தற்போது குழந்தைகள் கோடை விடுமுறையில் இருப்பதால் காலையில் எப்போதும் ஒரே இட்லி, தோசை என்று செய்து கொடுப்பதால் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதில் சலிப்பாகிவிடும். எனவே அவர்கள் காலை உணவை மகிழ்ச்சியாக விரும்பி சாப்பிடக்கூடிய வித்தியாசமான முறையில் ஒரு ரெசிபியை செய்து கொடுங்கள். வித்தியாசமான ரெசிபியா..அதுவும் காலையிலேவா..? என்று நீங்கள் யோசிக்கிறீர்களா..? ஆம் காலையில் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ரெசிபியை தான் நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம். அது வேறு ஏதும் இல்லை 'ஒயிட் சாஸ் பாஸ்தா' தான்.

இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை செய்து கொள்ளுங்கள்.. மீண்டும் மீண்டும் வேண்டி என்று சொல்லுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த ஒயிட் சாஸ் பாஸ்தா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 1 கப்
பூண்டு - 5 பல் 
வெங்காயம் - 1 
குடைமிளகாய் - 1 (சின்னது)
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஒயிட் சாஸ் செய்ய தேவையான பொருட்கள்: 
எண்ணெய் - 2 ஸ்பூன்
மைதா - 2 ஸ்பூன்
பால் - 100 மிலி ( காய்ச்சி ஆற வைத்தது)
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன் 
சில்லி ப்ளேக்ஸ் - 1 ஸ்பூன் 

இதையும் படிங்க: 'ஓட்ஸ் ஊத்தப்பம்' சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் காலை உணவு இது... ரெசிபி இதோ..!

செய்முறை: 
ஒயிட் சாஸ் பாஸ்தா செய்ய முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் சூடானதும் இப்போது அதில் பூண்டு சேர்த்து பூண்டின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். அதன்பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனை அடுத்து அதில் மிளகுத் தூள், உப்பு, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கிளரி, சிறிது நேரம் கழித்து அதை தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். 

இப்போது மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீர், 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நீர் நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்த பின் பாஸ்தாவை அதில் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் இருக்கும் நீரை வடிகட்டிவிடுங்கள். பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு ஒரு முறை அலசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  Makhana : காலையில் வெறும் வயிற்றில் மக்கானா சாப்பிடுங்க.. 'Slim' ஆகுவது உறுதி!

இதனை அடுத்து ஒரு காடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் எடுத்து வைத்த மைதாவை அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். அவை நன்கு க்ரீம் பதத்திற்கு வந்தவுடன் அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி  வேண்டும். சிறிது நேரம் கழித்து அதில்  வேக வைத்து எடுத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு அதில் கொஞ்சம் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். பிறகு அதை 5 நிமிடம் கழித்து இறக்கினால், டேஸான 'ஒயிட் சாஸ் பாஸ்தா' ரெடி..!! இந்த ரெசிபியை கண்டிப்பாக நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு முறையாவது செய்து பார்த்து உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!