இந்த மாதிரி ஒரு தோசையை நீங்க சாப்பிடிருக்க வாய்ப்பே இல்ல.. கண்டிப்பா ஒரு முறை ட்ரை பண்ணுங்க!

By Kalai SelviFirst Published May 8, 2024, 7:30 AM IST
Highlights

இந்த பதிவில் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான இந்த சுரக்காய் தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பொதுவாகவே, தென்னிந்தியாவில் பெரும்பாலும் காலை உணவாக இட்லி தோசை தான் இருக்கும். தினமும் இட்லி தோசை சாப்பிடுவதால் உங்கள் குழந்தைகள் முகம் சுளிக்கிறார்களா..? அவர்களுக்கு வித்தியாசமான முறையில் என்ன ரெசிபி செய்து கொடுப்பது என்று தெரியவில்லையா..? அப்படியானால் கவலை வேண்டாம். உங்களுக்கான பதிவு தான் இது. ஆம் இன்று இந்த பதிவில் உங்களுக்காக ஒரு சூப்பரான ரெசிபி கொண்டு வந்துள்ளோம். அது வேறு ஏதும் இல்லங்க 'சுரக்கா தோசை' தான். உங்க வீட்டில் பச்சரிசியும், சுரைக்காயும் இருந்தால் காலை உணவாக அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான தோசை செய்து சாப்பிடுங்கள்.

அதுவும் தற்போது கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. கொளுத்தும் இந்த கோடை வெயிலில் உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைக்க இந்த தோசை சுட்டு சாப்பிட்டால் மிகவும் நல்லது. குறிப்பாக இந்த தோசை சுடுவது மிகவும். ஒருமுறை இந்த தோசையை உங்கள் வீட்டில் செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த சுரக்காய் தோசையை எப்படி செய்வது என்பதற்கான ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
சுரைக்காய் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1 
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

இதையும் படிங்க: அட்டகாசமான சுவையில் சத்தான 'இன்ஸ்டன்ட் அடை தோசை'.. ரெசிபி இதோ!

செய்முறை: 
இந்த சுரக்காய் தோசை செய்ய முதலில், பச்சரிசியை தண்ணீரால் நன்கு கழுவி, 2 மணிநேரம் நேரம் ஊற வையுங்கள். அதன் பிறகு மிக்சர் ஜாரில் பச்சரிசியைப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு மென்மையாக அரைத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே மிக்சர் ஜாரில் துருவிய வைத்த சுரைக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து, அதை எடுத்து வைத்த பச்சரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். மேலும் அதில், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை, உங்கள் சுவைக்கேற்ப உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது சுரைக்காய் தோசை செய்வதற்கான மாவு தயார்.

இதையும் படிங்க: வீட்ல கோதுமை மாவு இருக்கா..? அப்போ ஒரு முறை முட்டைய வச்சு இந்த டிபன் செஞ்சு பாருங்க.. ரெசிபி இதோ!

தோசை சுட தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாகுங்கள். பிறகு அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அதன் மேல் கரைத்து வைத்த மாவை வட்ட வடிவில் ஊற்றி கொள்ளுங்கள். தோசை நன்றாக விட தோசையை சுற்றி எண்ணெய் விட்டுங்கள். தோசையைத் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவ்வளவுதான் இப்போது அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான சுரைக்காய் தோசை ரெடி!!  இந்த சுரக்காய் தோசைக்கு நீங்கள் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது கார சட்னி வைத்து சுவை அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள்.. பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!